அண்ணே… இப்படி அப்பாவியா இருக்காதீங்கண்ணே!

ஒரு ஆள் கொஞ்சம் சிரிச்சா போச்சு, பாக்கெட்ல பத்து பைசா விடாம துழாவி துடைச்சுட்டு போயிருவாங்க என்பதை சற்றே அதிர்ச்சியோடு எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் ஆர்யா. ஏன்யா? வேறொன்றுமில்லை, சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த மீகாமன் பஞ்சாயத்து சினிமா விரும்பிகள் யாவரும் அறிந்ததுதான். சுமார் இரண்டு கோடி வரைக்கும் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து படம் வெளிவர உதவி செய்தார் அவர். அது மட்டுமல்லாமல் அதே தயாரிப்பாளருக்கு மற்றுமொரு படத்தை இலவசமாக நடித்து தரவும் முன் வந்திருக்கிறார்.

இந்த களேபரம் அடங்குவதற்குள் இன்னொன்று. இரண்டாம் உலகம் படத்தை முதல் பிரதி அடிப்படையில் எடுத்துத்தர முன் வந்த செல்வராகவன், படத்திற்கு செலவு பண்ணுகிறேன் பேர்வழி என்று மேலும் மேலும் பணத்தை உள்ளே இறக்க, ஒரு கட்டத்தில் தயாரிப்பு செலவு தாறுமாறாக எகிறி விட்டது. ரிலீஸ் நேரத்தில் செல்வாவை மடக்கிய தயாரிப்பு தரப்பு, அவரது அபார்ட்மென்ட் ஒன்றை எழுதி வாங்கிக் கொண்டதுடன், மிச்ச பணத்தையும் சீக்கிரம் செட்டில் பண்ணிருங்க தொரை… என்று செல்லமாக வழியனுப்பி வைத்தது. இதிலிருந்து தப்பிக்கதான் அவர் தனது மனைவி பெயரில் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் இன்னொரு உதிரி உதார்.

இப்போது செல்வராகவன் தலையில் விழுந்த அதே கழுகு எச்சம், ஆர்யா தலைக்கும்! கூடவே அனுஷ்கா தலைக்கும்! இரண்டாம் உலகம் நஷ்டத்தை ஈடு செய்யும் பொருட்டு இவர்கள் இருவரும் குறைந்த சம்பளத்தில் எங்களுக்கு இன்னொரு படம் நடித்துத்தர வேண்டும் என்று அக்ரிமென்ட்டில் சைன் வாங்கிவிட்டதாம் கம்பெனி. அந்த கால்ஷீட்டை இப்போது கொடுத்திருக்கிறார்கள் இருவரும்.

இப்படியே போனா ஈசிஆர் ரோட்ல எப்படி தோட்டம் வாங்கிப் போடுறது ஆர்யாண்ணே? உஷார் உஷார்…

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top