மகாபலிபுரத்தில் கருணாகரன், ரமேஷ், வெற்றி, விநாயக், கார்த்திக் இவர்கள் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இதில் அப்பா-அம்மாவை இழந்த விநாயக், தனக்கு சிறுவயதில் அடைக்கலம் கொடுத்த அந்த ஊரின் பெரிய மனிதரும், அரசியல் பிரமுகருமான துரைக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.
கருணா, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் டூரிஸ் கைடாக வேலை பார்த்து வருகிறார்கள். வெற்றி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வெற்றியும் அங்கனாவும் காதலித்து வர, இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, நண்பர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தனி வீட்டில் தங்க வைக்கிறார்கள்.
சிற்பம் செதுக்கும் தொழில் செய்து வரும் விநாயக், நாயகி விர்த்திகாவை பார்க்கிறார். பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்பட்டு அவர் பின்னாலேயே சுற்றி வருகிறார். முதலில் விநாயக் காதலை மறுக்கும் விர்த்திகா, பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் நண்பர்கள் எல்லோரும் இண்டர்நெட்டில் படம் பார்க்கும் பொழுது, வெற்றியின் மனைவியான அங்கனாவின் ஆபாசப் படத்தை பார்க்கிறார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் வெற்றி, வீட்டிற்குச் சென்று அங்கனாவை பார்க்கிறார். ஆனால் அங்கனாவோ வீட்டில் பிணமாக கிடக்கிறார். இதைப் பார்த்த வெற்றியும் மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். இதனால் நண்பர்கள் மனவேதனை அடைகிறார்கள்.
அதன்பின்னர், கருணாகரன் கவுன்சிலராக வேண்டும் என்று துரையிடம் கேட்கிறார். வெளிநாட்டினருடன் இணைந்து போதை மருந்து தொழிலில் ஈடுபட்டு வரும் துரை, விநாயக்கின் காதலியான விர்த்திகாவை தன் வெளிநாட்டு நண்பர்களுக்கு விருந்தாக அழைத்து வரும்படியும் இல்லையெனில் கவுன்சிலர் பதவியை விநாயக்கிடம் கொடுப்பதாக கருணாகரனிடம் துரை கூறுகிறார்.
கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு கருணாகரனும் விநாயக் காதலியான விர்த்திகாவிடம் பொய் சொல்லி துரையின் இடத்துக்கு அழைத்து வருகிறார். அதன்பின் அங்கு என்ன நடந்தது? நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் விநாயக்கிற்கு முக்கிய கதாபாத்திரம். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்படுவராக வரும் கருணாகரன், வழக்கமான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். நண்பர்களாக வரும் வெற்றி, கார்த்திக், ரமேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நாயகிகளில் ஒருவரான அங்கனா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். மற்றொருவரான விர்த்திகா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குனர் டான் சாண்டி பல திருப்பங்களை புகுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார். குறிப்பாக பிற்பாதியில் நிறைய திருப்பங்களை வைத்திருக்கிறார். சமூக வலைதளங்கள் நல்ல விஷயங்களைத் தவிர, கெட்ட விஷயங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே அழிகிறது. இந்த அழிவிற்கு வேறு யாரோ காரணம் இல்லை. தங்களுக்கு நெருக்கமானவர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். ஆனால், நெருங்கிய நண்பர்களாக காண்பித்து அவர்களையே துரோகிகளாகவும் காண்பித்திருப்பது மட்டும் சற்று நெருடலாக இருக்கிறது.
கே இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார். சந்திரனின் ஒளிப்பதிவு மகாபலிபுரத்தின் அழகை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது. பல இடங்களில் இவருடைய கேமரா பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘மகாபலிபுரம்’ பலி புரம்.

0 comments:
Post a Comment