அழைத்தார் பூஜா மறுத்தார் பாலா!

இந்த வாரம் வெளியாவதாக இருந்த ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ படம், அப்படியே தாவி குதித்து அடுத்த வாரம்தான் வெளியாகிறது. அதாவது 20 ந் தேதி மார்ச்! யார் ஹீரோ என்பது படம் வெளிவந்த பின் ரசிகர்களால் கேட்கப்பட வேண்டிய கேள்வியாக இருக்கக்கூடும். ஆனால் ரிலீசுக்கு முன்பே கேட்கப்பட வேண்டிய கேள்வி ஒன்று உண்டு. அவர் வருவாரா? என்பதுதான் அது. இப்படத்தின் ஹீரோயின் பூஜா! தம்பி, நான் கடவுள், ஆட்டோ என்று பூஜா நடித்த சில படங்கள் மிக மிக முக்கியமானவை. ‘அந்த லிஸ்ட்டில் நான் ரொம்ப எதிர்பார்க்கிற படம் இந்த கடவுள் பாதி மிருகம் பாதி’ என்கிறார் அவரே.

‘இந்த படம் இப்போ வந்தாலும் சரி, அடுத்த வாரம் வந்தாலும் சரி. எனக்கு ஒரு ஸ்பெஷல் ஷோ வேணும்டா’ என்றாராம் தயாரிப்பாளரும் ஹீரோவும் இயக்குனருமான ராஜ்ஜிடம். இந்த மூன்று வேலைகளையும் ஒரு ஆளே சமாளிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் பூஜாவை சமாளிப்பது. ‘அதுக்கென்ன… எப்ப வேணும்னாலும் சொல்லு’ என்று கூறிவிட்டார் ராஜ். ஏன் தெரியுமா? இந்த ராஜும், பூஜாவும் திக் பிரண்ட்ஸ். கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதைவிட முக்கியம்… கல்லூரி நாட்களில் பூஜாவை விழுந்து விழுந்து காதலித்தவர் இந்த ராஜ்.

அதற்கப்புறம்தான் தெரிந்தது தனது முன்னாள் காதலி கேட்ட அந்த ஷோ பாலாவுக்காக என்று.

இயக்குனர் பாலாவுக்கும் பூஜாவுக்கும் சினிமாவை தாண்டிய ஒரு நட்பு உண்டு. அந்த நட்பின் அடிப்படையில் வெகு காலம் கழித்து தான் ஹீரோயினாக நடித்து வரும் படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்பது ஆசை. ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ படத்தை பார்க்க வரும்படி முறைப்படி பாலாவிடம் கேட்டிருக்கிறாராம். அவரோ ‘தாரை தப்பட்டையில பிசியா இருக்கேன். இப்ப முடியுமான்னு தெரியல’ என்று கூறியிருக்கிறாராம்.

எப்படியோ பாலா பாராட்டினார்னு நாலு வரி எழுதி வாங்கி பிரமோஷன்ல யூஸ் பண்ணதான் போறீங்க! செய்ங்க….

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top