ராஜதந்திரம் நல்லா வேலை செய்கிறது.- திரை விமர்சனம்..!,

தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு சில படங்கள் மட்டும் தான் வியந்து பார்க்கவைக்கும் அப்படி வியந்து பார்த்த படங்களில் சூதுகவ்வும், சதுரங்கவேட்டையும் ஏமாத்தி திருடுவது சம்மந்தப்பட்ட படம் அதே வகையில் வந்திருக்கும் படம் தான் ”ராஜதந்திரம்” கதைக்கு ஏற்ற தலைப்பு. வீரா, ரெஜினா நடிப்பில் புதுமுக இயக்குனர் எ.ஜி.அமிட் இயக்கத்தில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், சன்லேன்ட் சினிமாஸ், வைட் பக்கெட் நிறுவனங்கள் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது.

வீரா (அர்ஜூன்), அஜய் பிரசாத் (தேவராஜ்), டோம்புக சிவா (குள்ளன்) சின்ன சின்ன அளவில் ஏமாற்றி திருட்டு தொழில் செய்து கொண்டிருக்கும் இவர்கள் சென்னையில் உள்ள பெரிய நகைக்கடையான சத்யா ஜுவல்லரியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். இவர்கள் திருடுவதற்கு நியாயமான காரணம் உள்ளது, இந்த திருட்டு வெற்றிகரமாக முடிந்ததா…?? என்பது தான் கதை.

அர்ஜூனாக நடித்திருக்கும் வீரா இதற்கு முன்பு ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை ஏற்படுத்தும், தன் புத்தியை மூலதனமாக வைத்து சிறிய அளவில் திருடும் இவர் நாயகி ரெஜினாவின் (மிஷால்) வீட்டு கடனை அடைக்க 10 லட்சம் கருப்பு பணத்தை திருடும் காட்சிகளிலும் சரி, தந்திரமாக நாடகமாடி நகைக்கடை உரிமையாளர் பட்டியல் சேகரை ஏமாற்றும் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

எம் எல் எம் தொழிலில், தனக்கு கீழ் மூன்று பேரை சேர்த்தினால் தான் சில்வர், கோல்ட், பிளாட்டினம் என முன்னேறி தன் குடுமபத்தில் இருக்கும் கடனை அடைக்க போராடும் கதாபாத்திரற்கு கனகச்சிதாக பொறுந்திருகிறார் ரெஜினா.

குள்ளனாக வரும் டோம்புக சிவா ஆராவாரமில்லாத அசத்தலான காமெடிகளை அசால்டாக அவிழ்த்துவிடுகிறார், சில இடங்களில் நாகேஷை நியாபகபடுத்திகிறார். பட்டியல் சேகர், இளவரசு, நரேன், போலீஸ் அதிகாரி என அனைத்து கதாபாத்திரங்களும் அற்புதமான தேர்வு.

ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் பாடலுக்கு மட்டும் தான் இசை அமைத்துள்ளார் அதுவும் நான் சிகப்பு மனிதன் படத்தில் இடம் பெறும் பாடலின் இசையை அப்புடியே இதுல போட்டு வரிகளை மாற்றிவிட்டார் மனுஷன். சந்தீப் சவ்தலாவின் பின்னனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தெளிவு, கண்களுக்கு புதுமை. பிரவீன் ஆண்டனியின் எடிட்ங் செம சார்ப்பு.

படத்தை பார்த்த பிறகு இவர் புதுமுக இயக்குனர் என்று கூறினால் யாரும் நம்பமாட்டார்கள் நல்ல கதையை தெளிவான திரைக்கதையின் மூலம் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்திருக்கிறார் எ.ஜி.அமிட், அதுவும் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் வச்சு இருக்கார் மனுஷன் அதுக்கு முதல்ல பாராட்டுகள். படத்தின் பட்ஜெட் தான் சிறிசு ஆனா படம் பேசும் பெரிசா.

மொத்தத்தில் ராஜதந்திரம் நல்லா வேலை செய்கிறது.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top