"பச்சை" சட்டையை வைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏகத்துக்கும் "விளையாடி"க் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ப்ளூ சட்டை போட்ட இந்தியாவை வம்பிழுக்க ஆரம்பித்துள்ளனர் வங்கதேச ரசிகர்கள். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி நடை ரசிகர்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தி விட்டது. குறிப்பாக பாகிஸ்தானை அது தனது முதல் போட்டியில் வீழ்த்திய விதம் ரசிகர்களைக் கவர்ந்து விட்டது.
அதேபோல தென் ஆப்பிரிக்காவையும் இந்தியா தூக்கிப் போட்டு மிதித்த விதம், "ஆ..கா..க்கா" என்று ரசிகர்களை சிலாகிக்க வைத்து விட்டது. அதை விட சுவாரஸ்யமானது பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் சீருடை கலரை வைத்து ரசிகர்கள் வாரி வரும் விதம்தான். இப்போது அதேபோல பச்சை நிற சீருடைய அணிந்துள்ள வங்கதேசத்தை வைத்து இன்னொரு பச்சை சட்டைக்காரன் மாட்டிருக்கான் என்று கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் வங்கதேச வீரர்களோ, இந்தியாவின் சவாலை சந்திக்கத் தயார் என்று முழங்கி வருகின்றனர். ரசிகர்களோ, இந்தியாவை வங்கதேசம் வீழ்த்தும் என்று சவால் விட்டுப் பேசி வருகின்றனர்.
இந்தியாவைப் பார்த்து பயப்பட ஒரு காரணமும் இல்லை என்று வங்கதேச தற்காலிக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறியுள்ளார். தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை மிரட்டி விட்டது வங்கதேசம். கடுமையாகப் போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் அது தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இந்தியாவுடனான காலிறுதிப் போட்டி குறித்து ஷாகிப் அல் ஹசன் பேசியுள்ளார். அவரது பேட்டியிலிருந்து...
நாங்கள் நம்பிக்கையோடு இந்தியாவுடனான மோதலை எதிர்நோக்கியுள்ளோம். இதுவரை நாங்கள் விளையாடிய விதம் நன்றாகவே உள்ளது. அது காலிறுதிப் போட்டிக்கு எங்களை தெம்புடன் சந்திக்க உதவியுள்ளது.
காலிறுதிப் போட்டி குறித்து இன்னும் நாங்கள் சிந்திக்கவே இல்லை. ஆனால் அது நிச்சயம் அருமையான போட்டியாக இருக்கும்.
இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு அபரிமிதமாகவே இருக்கும். ஆனால் எங்களது முதல் காலிறுதிப் போட்டியை சிறப்பாக முடிக்க நாங்கள் ரெடியாக இருக்கிறோம்.
நேர்மையாக சொல்வதாக இருந்தால், காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதையே குறிக்கோளாக வைத்திருந்தோம். இப்போது வந்து விட்டோம். காலிறுதிப் போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கேற்ப நாங்கள் தயாராகி வருகிறோம். எங்களது வீரர்களும் ரெடியாகவே உள்ளனர்.

0 comments:
Post a Comment