அமீர் கானை தேடிவந்த வில்லன் கேரக்டர்

திபாகர் பானர்ஜி இயக்கத்தில், விரைவில் வெளியாக உள்ள டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தில், வில்லன் கேரக்டரில் நடிக்க திபாகர், அமீர் கானை தொடர்புகொண்டதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படக்குழுவினர் தெரிவித்துள்ளதாவது, டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தில் நடிக்க அமீர் கானை தொடர்பு கொண்ட போது, அவர் தூம் 3 படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

அப்படத்திலும், அமீர் கானுக்கு நெகட்டிவ் ரோல் தான். மேலும், டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி மற்றும் தூம் 3 படத்தின் தயாரிப்பாளரும் ஒருவரே. அவர் ஆதித்யா சோப்ரா. எனவே, தங்கள் படத்தில் நடிக்க அமீர் கானை வற்புறுத்தவில்லை.

தங்களது படத்தில் வில்லன் கேரக்டர் திறம்பட உருவாக்கப்பட்டிருப்பதாகவும், படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உண்டு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top