கொரியன் சீரியல் சில வேற்றுமைகள் பல ஒற்றுமைகள்

தமிழ் சினிமாவில் ஒரு நேரம் மொத்தத் தாய்க்குலமும் சன் டிவியில் வரும் சீரியலே கதி என்று கிடந்தார்கள். மெல்ல அடுத்த தலைமுறை வரும்போது டப்பிங் சீரியல்கள் முக்கியத்துவம் பெற்றன.

தற்போது 21 ம் நூற்றாண்டு இளைஞிகள் வந்து இங்கிலீஷ் சீரியலை மூர் மார்கெட்டில் தேடி வாங்கிப் பார்த்து அதெல்லாம் மலையேறிப் போச்சு பாஸ் அண்ணா கொரியன் சீரியல்ஸ் இருக்கா இல்லையா வேற கடைக்கு போய் பாக்கலாம் அப்படி இல்லேன்னா நெட்ல டவுன்லோட் பண்ணிக்கலாம் என்று சொல்லித் தேடித் தேடி கடைகளில் கொரியன் சீரியலை வாங்குகின்றனர்.

இதெல்லாம் பரவா இல்லைங்க இப்போ காலேஜ்ல புதுசா சேரப் போற பொண்ணுங்களோட பேச ஆரம்பிச்சா அந்த சீரியல்ல வர கொரியன் செம அழகுடி சான்சே இல்ல என்று சகட்டுமேனிக்கு தமிழ் ஹீரோக்களை வாரிவிடுகிறார்கள். நம்ம பொண்ணுங்களுக்கு தான் யாராவது புதுசா எதுவும் செஞ்சிடக் கூடாதே.

இந்த சீரியல பாத்துட்டு அதே மாதிரி டிரஸ் எடுத்துப் போடுறது, நாய வளக்குறது இதெல்லாம் கூட நான் பொறுத்துக்குவேன் ஆனா அந்தக் குச்சிய வச்சி சாப்பிடறத தான் என்னால பொறுத்துக் கவே முடில குச்சி பேரு என்ன தெரியுமா சாப்ஸ்டிக்ஸ். இதெல்லாம்பத்தாதுன்னு புது யுகம் சேனல்ல கொரியன் சீரியல டப் பண்ணி போட்டு விட்டு மிச்சம் மீதி பாக்காம இருந்தவங்களும் இப்போ பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

எல்லோருமே விழுந்து விழுந்து பாக்கற இந்த சீரியலோட எல்லா கதையும் கிட்டத் தட்ட ஒரே மாதிரிதான், இதுக்கே ஷாக் ஆனா எப்படி மனசத் தேத்திட்டு மேலே படிங்க உங்களுக்கே தெரியும்..பின்ன எத்தன நாளைக்கு தான் நம்ம ஊரு சீரியலையே கலாய்க்கிறது

ஒரு சேஞ்சுக்கு அடுத்த நாட்டு சீரியலையும் கலாய்ப்போம், என்னது நீங்க வரலையா சரி நானே பண்ணிடறேன்.

பணக்கார ஹீரோ

எல்லா கொரியன் சீரியல்லையும் ஹீரோ கண்டிப்பா பணக்காரரா இருப்பார். ஹீரோன்னா ஸ்கூல் தான் நீங்க எதுவும் பெரிய ஆக்சன் ஹீரோனு நெனைச் சுடாதிங்க.

மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கும்

ஹீரோவோட அம்மாவோ அல்லது அப்பாவோ தன் அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி பையனுக்கு கல்யாணம் பேசி முடிச்சிடுவாங்க நிறைய சீரியல்கள்ல அம்மாதான் இந்த வேலைய செய்வாங்க.

வறுமையில் வாடும் ஹீரோயின்

ஹீரோயின் பெரும்பாலும் வறுமையிலவாடுவாங்க அல்லது நடுத்தரக் குடும்பத்தினரா வருவாங்க, படிச்சிட்டே பார்ட் டைமா வேலை பார்ப்பாங்க கண்டிப்பா அது ஒரு ஹோட்டல் இல்லன்னா ஸ்நாக்ஸ் ஷாப்பா இருக்கும்.

காதல்

ஹீரோவுக்கு கண்டிப்பா ஹீரோயின் மேல காதல் வந்துடும் ஆனா அத வெளிக் காட்டாம அவங்களுக்கு உதவி செய்வாரு.

காதலை பிரித்தல்

ஹீரோவோட காதல தெரிஞ்சிகிட்ட ஹீரோவோட அம்மாவோ அல்லது அப்பாவோ ஆளுங்கள அனுப்பி ஹீரோயினோட கண்ணு முன்னாடியே அவரை இழுத்துட்டுப் போய்டுவாங்க, சரி நம்மளாலதான் இப்படின்னு இந்த லூசு ஹீரோயின்களும் ஹீரோவா விட்டு கண்காணாத தூரத்துக்கு பிரிஞ்சு போய்டுவாங்க.

ஆண் வேடம் போடும் ஹீரோயின்

முன்ன பின்ன நேரடியா பாக்காத ஹீரோவுக்காக ஹீரோயின் ஆண் மாதிரி மாறி அவரோட ஸ்கூல்க்கு வந்து படிப்பாங்க, அவர் கூடவே சுத்துவாங்க இத ஹீரோவைத் தவிர மத்த எல்லோரும் ஈசியா கண்டுபிடிச்சுடுவாங்க ஆனா கடைசிவரைக்கும் கூடவே சுத்திட்டு இருக்கற ஹீரோவுக்கு மட்டும் இது தெரியாது.

கண்டிப்பா ஒரு நாய் இருக்கும்

சீரியல்ல நல்லா கொழுகொழுன்னு ஒரு நாய் இருக்கும் இது எப்பவுமே ஹீரோயினோட சுத்தும் முடிஞ்சா அப்பப்போ ஹீரோவுக்கும் கம்பெனி கொடுக்கும் இது மேல படுத்து தான் ஹீரோயின் பெரும்பாலும் தூங்குவாங்க.

ஹீரோ சம்திங் ஸ்பெஷல்

ஹீரோ எதாவது ஒரு துறையில ரொம்ப பேமஸா இருப்பாரு நடிகரா, பாடகரா, விளையாட்டு வீரரா அப்படி எதுல இருந்தாலும் அதுல நம்பர் ஒண்ணா இருப்பாரு.

இன்னும் சொல்லலாம் ஆனா வேணாம்..அப்புறம் நான் ஊருக்குள்ள நடமாடணும்..

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top