கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் தனக்கென ஒரு மார்கெட்டை வைத்து இருந்து நிறுவனம் மேகி நூடுல்ஸ் ஆகும். 1982 ஆண்டு முதல் 2 மினிட்ஸ் நூடுல்ஸ் என இதனை விளம்பரம் செய்ய தொடங்கினார்கள். இது குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமைப்பதற்கு எளிதாக இருப்பதால் பெண்களும் இதனை விரும்பினர். அனைவருக்கும் சமைக்க தெரிந்த ஒரு உணவாக மேகி நூடுல்ஸ் மாறியது. இதற்கு போட்டியாக பல நூடுல்ஸ்கள் வந்தன ஆனால் யாராலும் இவர்களோடு போட்டி போட முடியவில்லை. டாப் ராமன், யிப்பி , அனில் நூடுல்ஸ் என வந்தாலும் பலரும் மேகியை தான் விரும்பினர். இப்படி சரிவே காணாத மேகிக்கு இந்த ஆண்டு சோகமாக மாறியுள்ளது. இதில் லெட்டின் அளவு அதிகமாக இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என ஒரு பிரச்சனை கிளம்பியது. அது பெரிய பிரச்சனையாகி தற்போது வரை அதனை 5 மாநிலங்களில் தடை செய்துள்ளார்கள். அதனால் பிரச்சனை தீரும் வரை மேகி நூடுல்ஸை விற்பனை செய்ய மாட்டோம் என நெஸ்லே இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. இது சாப்பிடுவதற்கு உகந்தது என நிருபித்து மீண்டும் இழந்த மார்கெட்டை பிடிப்போம் என கூறியுள்ளார்கள். ராணுவம், வால்மார்ட், நீல்கிரிஸ் உள்ளிட்ட இடங்களிளும் இதனை விற்க தடை செய்ததால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.
எனவே தற்போது இந்தியாவில் எங்கும் மேகி நூடுல்ஸை விற்க முடியாது. இது ஒரு தனி மனிதனின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேகியில் இத்தனை பிரச்சனை இருப்பதை பலரும் முன்னரே தெரிவித்துள்ளனர். ஆனால் பலரும் உணரும் படி செய்தவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ஆவார் . அவரின் பெயர் வி.கே. பாண்டே ஆகும். வி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார். 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர். இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்தவர். இவர் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்பது பலருக்கு தெரியாத ஒன்று. இப்போது தான் இவரது முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிதான் மேகிக்கு பிரச்சினை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார். தயாரிப்பில், நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்.எஸ்.ஜி. கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. அதன் பிறகு தான் இந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு தெரிய வந்தது. இப்போது தான் அதன் விற்பனை என்பது இந்தியாவிலையே கிடையாது. இது தான் அந்த மனிதனின் சாதனை, ஒரு தனி மனிதனால் நேர்மையாக இருந்தால் சாதித்து காட்ட முடியும் என்பதை நிருபித்துள்ளார்.

Visit : http://blogintamil.blogspot.in/2015/07/blog-post_22.html
ReplyDelete