எப்.எம். ரேடியோக்கள் அதிரடி முடிவு! – இடிந்து போன பிரபல இசையமைப்பாளர்!

பிரபல இசையமைப்பாளர் ஒருவரை அவரது ரசிகர்களும், அவரது ஜால்ராக்களும் இசைஞானி என்றும், ராகதேவன் என்றும் ஆராதித்து வருகிறார்கள்.

உண்மையில் அந்த பிரபல இசையமைப்பாளர், ஞானியும் இல்லை… தேவனும் இல்லை…!
எல்லா மனிதர்களையும்போல் பலமும்.. பலவீனமும் கொண்ட… பணத்தின் மீது தீராத ஆசை கொண்ட சராசரி மனிதன்தான்.

அதே சமயம், இசையமைப்பாளராக அவர் மிகப் பெரிய மேதை!

அவரது இசை சாகாவரம் பெற்றவை…!

தனிப்பட்ட மனிதராக அவர் இப்படிப்பட்ட போற்றுதலுக்கு உரியவர் இல்லை என்பது அவருடன் பணியாற்றிய, அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.

சமீபகாலமாக அவர் நடந்து கொள்கிறமுறை அந்த பிரபல இசையமைப்பாளர் மீதான மரியாதையை மரிக்கச் செய்கின்றன.

குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்த உலகப் புகழும், ஆஸ்கார் அங்கீகாரமும், கோடிக்கணக்கில் அவர் சம்பாதிப்பதும் அந்த பிரபல இசையமைப்பாளரினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை போலிருக்கிறது.

இதை அந்த பிரபல இசையமைப்பாளரின் பேச்சிலேயே பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

பிஸியாக இருந்த தன்னை பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்கார வைத்தவர் என்ற வகையில் ஏ.ஆர்.ரஹ்மானை நேரடி எதிரியாய் எண்ணும் அந்த பிரபல இசையமைப்பாளர், தன் வாரிசுகள் தவிர்த்து இன்றைய இளம் இசையமைப்பாளர்களையும் எதிரியாகவே எண்ணுகிறார்.

இளம் தலைமுறை இசையமைப்பாளர்கள் யாரையும் மனம் திறந்து பாராட்டுவதில்லை.

விழாக்களில் பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இளம் இசையமைப்பாளர்களை வசைமாரிப் பொழிகிறார் – அந்த பிரபல இசையமைப்பாளர்.

அதே சமயம், அந்த பிரபல இசையமைப்பாளரினால் இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் உடன் மட்டுமல்ல சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான் உடன் கூட போட்டிபோட முடியாது என்பதே உண்மை.

அதனால்தானோ என்னவோ, தான் ஏற்கனவே அமைத்த இசையை வைத்து கோடிக்கணக்கில் பணம் பண்ண வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

அவர் இசையமைத்த திரைப்படப்பாடல்களை பல வருடங்களுக்கு முன் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து முறைப்படி உரிமை வாங்கியவர்கள் இனிமேல் ஆடியோ சிடிக்களை வெளியிட முடியாதபடி நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பெற்றுவிட்டார் அந்த பிரபல இசையமைப்பாளர்.

தற்போது அடுத்த கட்டமாக எப்.எம்.ரேடியோக்களில் தன் பாடல்களை வெளியிடக்கூடாது என்றும், தன் பெயரைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்றும் சில தினங்களுக்கு முன் முன்எச்சரிகை விடுத்திருந்தார்.

நாங்கள் ஒலிபரப்பும் பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் அந்த பிரபல இசையமைப்பாளரை மக்கள் மறந்துவிடாதபடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இப்படியொரு எச்சரிகையா என்று அதிர்ச்சியடைந்த சில எப்.எம்.ரேடியோக்கள், அந்த பிரபல இசையமைப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தின.

அந்த பிரபல இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்களை ஒரு மணி நேரம் ஒளிபரப்பினால் 250 ரூபாய் ராயல்ட்டி என்ற அடிப்படையில் ஒரு எப்.எம். ஸ்டேஷன் மட்டுமே தற்போது மூன்று மாதத்துக்கு சுமார் மூன்று லட்சம் வழங்கி வருகிறதாம்.

இனிமேல் என் பாடலை ஒரு மணி நேரம் ஒளிபரப்பினால் 750 ரூபாய் ராயல்ட்டி என்ற அடிப்படையில் ஒரு எப்.எம். ஸ்டேஷன் மட்டுமே மூன்று மாதத்துக்கு சுமார் ஒன்பது லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்கிறாராம். அதாவது தற்போது வழங்கப்படும் ராயல்ட்டி தொகையைவிட மூன்று மடங்கு தொகை.

சூரியன், ரேடியோ மிர்ச்சி, சென்னை லைவ், ஹலோ, ரேடியோ சிட்டி, ரேடியோ ஒன், ஆஹா, பிக், ரெயின்போ, கோல்டு என சென்னையில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட எப்.எம். ஸ்டேஷன்கள் உள்ளன.

இவற்றில் – சூரியன் 7 இடங்களிலும், ஹலோ எப்.எம். 7 இடங்களிலும், ரேடியோ மிர்ச்சி 3 இடங்களிலும், பிக் எப்.எம். 2 இடங்களிலும் தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் தங்கள் சேவையை அளித்து வருகின்றன. ஆக.. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 எப்.எம். ஸ்டேஷன்கள் உள்ளன.

மூன்று மாத்துக்கு ஒரு எப்.எம். ஸ்டேஷன் 9 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அந்த பிரபல இசையமைப்பாளர் கேட்கிறார். அவரது கணக்குப்படி, வருடத்துக்கு ஒரு எப்.எம். ஸ்டேஷன் மூலம் 36 லட்சம் அவருக்கு வருமானம் கிடைக்கும்.

ஒரு எப்.எம். ஸ்டேஷன் மூலம் வருடத்துக்கு 36 லட்சம் என்றால், மொத்தம் உள்ள 30 எப்.எம். ஸ்டேஷன்கள் மூலம் அவருக்கு எவ்வளவு வருமானம் வரும்?

10 கோடியே 80 லட்சம்.

உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு வருடத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தன் பெயரையோ… பாடலையோ பண்பலை வானொலிகள் பயன்படுத்தக் கூடாது என்கிறார் போலிருக்கிறது.

அவர் கேட்கும் தொகை மிக அதிகமாக இருப்பதால் இனி அந்த இசையமைப்பாளரின் பாடல்களை ஒளிபரப்புவதில்லை என்று ஒட்டுமொத்தமாக அனைத்து எப்.எம். ஸ்டேஷன்களும் முடிவு செய்துள்ளன.

தன்னுடைய பாடல்கள் இல்லாமல் பண்பலை ஒலிபரப்பு இருக்காது என்று நினைத்திருந்து அந்த இசையமைப்பாளருக்கு, அனைத்து எப்.எம். ஸ்டேஷன்களும் எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top