தென்னிந்தியாவின் ஐந்து முதல் அமைச்சர்களுடன் நடித்த மனோரமா..!

நகைச்சுவை வேடம் உட்பட பலவிதமான குணச்சித்திர வேடங்களில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மனோரமா.
1943ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்த மனோரமா 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரது இயற்பெயர் கோபி சாந்தா.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்த் திரையுலகினராலும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ஆச்சி என அன்போடு அழைக்கப்பட்டு வருகின்றார்.

மேலும் தென்னிந்தியாவின் ஐந்து முதல் அமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர் மனோரமா. கா. ந. அண்ணாதுரை, முத்துவேல் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா ஜெயராம் மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் உடன் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 2002 ஆம் ஆண்டு தேசிய திரைப்பட விருதையும், 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்று சாதனை மேல் சாதனை படைத்துள்ள ஆச்சி மனோரமாவிற்கு இன்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழ் உலகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top