உலகத்தின் எல்லா பயபுள்ளைங்களும் இப்போது செல்ஃபி புள்ளைதான். கல்யாண வீட்டில், சாவு வீட்டில், கடற்கரையில், பாலைவனத்தில், பயணத்தில், பாதித் தூக்கத்தில்… செல்ஃபிகளைச் சுட்டுத் தள்ளுகிறார்கள். அந்த உலக செல்ஃபி வைரல் ட்ரெண்டிங்கின் சில சாம்பிள்கள் இங்கே…
செல்ஃபி குச்சி
நீளமான ஓர் இரும்புக் கம்பி. அதன் ஒரு முனையில் செல்போனை இணைக்கும் வசதி. மறுமுனையில் செல்போனை இயக்கும் பட்டன் அல்லது ப்ளூடூத் மூலம் இயக்கும் வசதி. மேலே, கீழே, பக்கவாட்டில் என எங்கு வேண்டுமானாலும் செல்போனைத் தூக்கிப் பிடித்து புகைப்படங்களை எடுக்கலாம். நம்மையும் நமக்குப் பின்னால் இருக்கும் மனிதர்கள், கட்டடங்கள் எதுவாக இருப்பினும் அனைத்தையும் சேர்த்து க்ளிக்கலாம். ஒரு செல்ஃபி ஸ்டிக், 400 ரூபாயில் ஆரம்பித்து, 4,000 ரூபாய் வரை விற்கிறார்கள்.
உண்மையில், செல்ஃபி ஸ்டிக் சமீபத்தியக் கண்டுபிடிப்பு அல்ல. 1995-ம் ஆண்டிலேயே ஜப்பானில் இதைக் கண்டுபிடித்துவிட்டனர். ‘101 useless japanese inventions’ என்ர புகழ்பெற்ற புத்தகத்தில், இப்போது உள்ளதைப்போன்ற அச்சு அசல் செல்ஃபி ஸ்டிக்கின் புகைப்படம் இருக்கிறது. இப்போதோ, 2014-ம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக செல்ஃபி ஸ்டிக்கை வகைப்படுத்தி உள்ளது ‘டைம்’ பத்திரிகை!
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைவிட ஆசிய நாடுகளில்தான் செல்ஃபி ஸ்டிக்குக்கு வரவேற்பு அதிகம். பிலிப்பைன்ஸ் நாட்டை, ‘உலகின் செல்ஃபி தலைநகரம்’ என்கிறார்கள். மற்ற நாடுகளைப்போல் அல்லாமல் இங்குள்ள மியூசியத்தில் செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள்; ஊக்குவிக்கிறார்கள்.
செல்ஃபி ஆப்ஸ்
Selfie Shirt என்றொரு ஆப், கூகுள் ஸ்டோரில் கிடைக்கிறது. இதை டவுண்லோடு செய்து, உங்களை செல்ஃபி எடுத்து அவர்களுக்கு அனுப்பிவைத்தால், அந்த செல்ஃபி புகைப்படத்தை டி-ஷர்ட்டில் பிரின்ட் செய்து அனுப்பிவைப்பார்கள். உங்கள் முகத்தை நெஞ்சில் ஒட்டிக்கொண்டு ஊர் சுற்றுலாம். அப்படியே ஒரு செல்ஃபி எடுத்தால், ஒரே புகைப்படத்தில் உங்களின் இரு முகங்களையும் கண்டு ரசிக்கலாம். இப்படி கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏகப்பட்ட செல்ஃபி செயலிகள் கிடைக்கின்றன.
சாவு செல்ஃபி
ரஷ்யாவில் ஷெனியா இக்னேட்யேவா என்கிற 17 வயது மாணவி, ரயில்வே பாலத்தின் உச்சியில் ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்தார். ரயிலின் பின்னணியில் செல்ஃபி எடுப்பது அவரது திட்டம். ஆனால், வெறும் இரும்புக் கம்பிகளால் ஆன பாலத்தில் அவரால் நிற்க முடியவில்லை. தடுமாறிச் சரிந்து அருகில் இருந்த ஹை வோல்டேஜ் மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் அதில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு தரையில் விழுந்து இறந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான சான்ஃபோர்டு என்கிற பெண்மணி, ‘ஹேப்பி’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே அலுவலகத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். செல்போனை எடுத்து செல்ஃபி எடுத்து ‘ஹேப்பி வித் ஹேப்பி’ என டைப் செய்து ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்தபோது, நேரம் காலை 8.33 மணி. அவரது கார், எதிரில் வந்த மற்றொரு வாகனத்தின் மீதும், சாலையோர மரத்தின் மீதும் மோதி அவர் உடல் நசுங்கி இறந்தபோது, நேரம் காலை 8.34 மணி.
உலகம் எங்கும் டூ-வீலர் மற்றும் கார்களில் வண்டி ஓட்டிக்கொண்டே செல்ஃபி எடுக்க முயலும் பலருக்கும், அது ‘சாவு செல்ஃபி’யாகவே அமைகிறது. முக்கியமாக, வித்தியாசமான பின்னணியில் எடுக்க வேண்டும் என மெனக்கெடுபவர்கள், ஆபத்தை வலியச் சென்று இழுத்துக்கொள்கிறார்கள்.
மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர், அவர்களில் ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாட ‘வாசி’ என்ற அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்றனர். சைலேஷ் கதேல் என்கிற மாணவர், அணைக்கட்டுக்குள் இறங்கி தண்ணீருக்குள் நின்றபடி வித்தியாச செல்ஃபி எடுக்க முயற்சித்திருக்கிறார். திடீரென அணைக்கட்டின் ஆழத்தில் சிக்கி மூழ்கினார் கதேல். அவரைக் காப்பாற்ற இரண்டு நண்பர்கள் ஓடிச்சென்று குதிக்க… மூவருமே பிணமாக மிதந்தார்கள். கடந்த ஜனவரியில், ஆக்ராவில், வேகமாக வந்துகொண்டிருந்த ரயிலின் முன்பு, தண்டவாளத்தின் நடுவே நின்று செல்ஃபி எடுத்த மூன்று இளைஞர்கள் அதே ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள்.
இந்தச் சம்பவம், எல்லாவற்றுக்கும் உச்சம். மெக்ஸிகோவைச் சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேரோ அகுலர் என்கிற இளைஞருக்கு 21 வயது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் குடித்துவிட்டு தனது செல்ஃபோனில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த கைத்துப்பாக்கி கண்களில் பட… அதை எடுத்து தலையில் வைத்து, சுட்டுக்கொல்வதுபோல செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால், செல்போனின் க்ளிக் பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக துப்பாக்கியின் ட்ரிக்கரை போதையில் அழுத்த… தலை சிதறி இறந்தார்!
‘சாவுங்கடா’ செல்ஃபி
கெய்ஸுகி (Keisuke) என்கிற ஜப்பான் இளைஞருக்கு, யாரைப் பார்த்தாலும் ஜோடி ஜோடியாக ரொமான்டிக் செல்ஃபி எடுத்து போடுவதைப் பார்த்து செம கடுப்பு. ‘உங்களை எல்லாம் கலாய்க்கிறேன் பாருங்கடா’ என ஒரு ட்ரைபேடு, சில செட் பிராப்பர்ட்டீஸுடன் கிளம்பியவர், தன்னுடன் ஒரு கேர்ள் ஃப்ரெண்டும் இருப்பதைப்போன்று விதவிதமான செல்ஃபிகளை எடுத்து உலவவிட்டார். வெறும் செல்ஃபி என்றால் அது பத்தோடு பதினொன்று. இவர் வொர்க்கிங் ஸ்டில்லையும் சேர்த்து வெளியிட்டார். இதனால் இவரது வலைதளமும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டும் எக்கச்சக்க ஹிட். ‘சிங்கிளா இருக்கிறதுக்காகக் கவலைப்படாதீங்க ப்ரோ. இப்படித்தான் எல்லாரையும் கலாய்க்கணும்’ என டிப்ஸும் தருகிறார்

0 comments:
Post a Comment