வெற்றி பெற்ற முன்னணி இயக்குநர்களின் உதவியாளர் என்று சொன்னால்தான் தயாரிப்பாளர்கள் கதை கேட்க காது கொடுப்பார்கள். கதை பிடித்தால் வாய்ப்பு தருவார்கள்.
தயாரிப்பாளர்களின் இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்டு ‘நான் ஷங்கரின் அஸிஸ்டெண்ட்.’ ‘மணிரத்னத்தின் அஸோஸியேட்’ என்றெல்லாம் பொய் சொல்லி பட வாய்ப்பைப் பெறுவது படத்துறையில் சகஜம்.
இப்படிப்பட்டவர்களை சம்மந்தப்பட்ட இயக்குநர்கள் கண்டு கொள்ளாதவரை பிரச்சனை இல்லை.
நம்ம பேரைக் கெடுப்பதா என்று இயக்குநர்கள் டென்ஷன் ஆனால் சிக்கல்தான்.
சில வாரங்களுக்கு முன் பிரபல நாளிதழில் வந்த இருவர் ஒன்றானால் என்ற படத்தின் விளம்பரம் ஏ.ஆர்.முருகதாஸின் பிபியை எகிற வைத்தது.
FROM ASSOCIATES OF A R MURUGADOSS – என்று இருவர் ஒன்றானால் படத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த வாசகம்தான் அவரை அநியாயத்துக்கு டென்ஷனாக்கிவிட்டது.
அந்தப் படத்தை இயக்குபவர் அவரிடம் எந்தக்காலத்திலும் உதவியாளராக வேலை பார்த்ததில்லையாம்.
தன்னிடம் வேலை பார்க்காத ஒருவர் தன் பெயரை பயன்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாத ஏ.ஆர்.முருகதாஸ் இது பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
சம்மந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளரை அழைத்து ஏ.ஆர்.முருகதாஸ் பெயரை மிஸ்யூஸ் பண்ணக்கூடாது என்று எச்சரித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.
அதன் பிறகு இருவர் ஒன்றானால் படத்தின் விளம்பரத்தில் FROM ASSOCIATES OF A R MURUGADOSS என்ற வாசகம் நீக்கப்பட்டது.
இதேபோன்றதொரு சம்பவம் இப்போதும்…
நேற்று வெளியான திறந்திடு சீசே என்ற படத்தை எம்.நிமேஷ்வர்ஷன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார்.
இவர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் என்று விளம்பரம் செய்யப்பட்டது.
தற்போது பிரான்ஸில் இருக்கும் டைரக்டர் ஷங்கர் திறந்திடு சீசே டைரக்டர் தன் பெயரை பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டு டென்ஷனாகிவிட்டார்.
நமக்கு சம்மந்தமில்லாத யாரோ நம் பெயரை பயன்படுத்துவதா என கடுப்பான ஷங்கர்,
திறந்திடு சீசே பட இயக்குநர் யார்?
அவர் என்ன படத்தில் என்னிடம் உதவியாளராக வேலை பார்த்தார்?
அவரது உண்மையாகன பெயர் என்ன?
என்று அவரைப் பற்றி விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்.
ஷங்கர் தரப்பிலிருந்து திறந்திடு சீசே படத்தின் இயக்குநர் எம்.நிமேஷ்வர்ஷனிடம் விசாரித்தனர்.
அவர் எந்திரன் படத்தில், சயின்ஸ் லேப் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்ட ஷெட்யூலில் ஷங்கரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவராம்.
தவிர சுடர் என்ற குறும்படத்தையும் இயக்கியவராம்.
இந்த தகவல் பிரான்ஸில் உள்ள ஷங்கருக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

0 comments:
Post a Comment