தமிழகத்தின் ஒவ்வொரு பெண்களுக்கும் வேலி, அவள் கணவன் கட்டிய தாலி தான்.. என்று ஒரு படத்தில் விவேக் சொல்வார். நம் தாய்குலங்களை ஈஸியாக கண்ணீர விட செய்யும் ஒரு ஆயுதம் தான் இந்த தாலி செண்டிமெண்ட். சீரியலில் ஆரம்பித்து பல சீரியஸ் கதைகள் வரை இது தொடர்கிறது.
அதிலும் தமிழ் சினிமாவின் கையில் இந்த தாலி மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை இருக்கே, அதை எல்லாம் வார்த்தையில் விளக்க முடியாது. இத்தகைய எமோஷ்னல் தாலி செண்டிமெண்டை, கடந்த வாரம் காமெடி திருவிழாவாக மாற்றியது சு.சுவாமி செய்த விஷயம் ஒன்று தான்.
எப்படா எவண்டா கடைய திறப்பானங்கன்னு காத்திருந்த நம்ம நெட்டிசன்களுக்கு, அரை கிலோ அல்வாவை அப்படியே சாப்பிட கொடுத்தது போல் மாட்டினார். அதிலும் வடிவேலு ஸ்டைலில் ‘ஏம்மா ஒரு பேஷண்டு கையிலா ஏதாவது கொடுக்கும் போது சொல்லிட்டு கொடுங்கமா’ன்ற மாதிரி, அந்த மனுஷன் கையில தாலிய கொடுக்கும் போது சொல்லிட்டு கொடுக்க மாட்டீங்களாப்பா...அவரு ஏதோ கட்ட தான் கொடுக்குறாங்கன்னு எடுத்து கட்டிட்டாரு அதுக்கு இப்படியா கலாய்க்கிறது.
அத விடுங்க சின்ன தம்பி படத்துல தாலி என்றாலே என்னான்னு தெரியாம இருக்கும் பிரபுவையும், அதே படத்தில் வர ‘எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம்’ லூசு வரைக்கும் Connect பண்ணி அந்த பெரிய மனுஷன்னா கலாய்ச்சீங்களே.. காசியில் போய் கரைச்சாலும் இந்த பாவம் உங்களா சும்மா விடாதுன்ற ரேஞ்சுக்கு சில சுவாமி ஆதரவாளர்கள் பொங்கினார்கள்.
தமிழ் சினிமாவில 50 கொலை, 60 ரேப் செய்த கொடூர வில்லன் ஒருவனை கொலை செய்ய வரும் போது, அவனுடைய மனைவி தன் தாலியை காட்டி மடிப்பிச்சை கேட்டால், அந்த வில்லனே செண்டிமெண்ட்டில் உருகி மனம் மாறிடுவான். அப்படிப்பட்ட புனிதமான செண்டிமெண்ட செகண்ட் ஷோ புதுப்பேட்டை படம் பார்த்து விட்டு, அதே நியாபகத்தில் தான் இப்படி செய்து விட்டார் என ஒரு குரூப் மிமிக்களை அடித்து வெளியிட சுவாமிக்கும் மட்டுமில்லை அருகில் இருந்த மாமி வரை மிமி கிரியேட் செய்து கலங்கடித்து விட்டனர்.
ஆனால், அஜித் தும்மினாலும் ட்ரண்ட், விஜய் வெகுளியாக பேசினாலும் ட்ரண்ட் செய்யும் இணையவாசிகள் கையில் இப்படி ஒரு மேட்டர் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? #JustMissedSaami என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்துவிட்டனர். வாழ்க்கையை வெறுத்தவர்கள், வாழவே கூடாது என்று நினைப்பவர்கள் ஒரு நிமிடம் டுவிட்டரில் இந்த டாக்கை போய் பாருங்கள்...நம் இணையவாசிகளின் கற்பனை+நகைச்சுவை திறன் சிரிக்க வைத்து உங்கள் புத்துணர்ச்சி அளிக்கும். அப்படி ஒரு கலாட்டவான டாக் தான் இது.

0 comments:
Post a Comment