எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- நடிகர் கவுண்டமணி

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் நடித்து வருகிறார் காமெடி அரசர் கவுண்டமணி.ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பரந்த நடிகர் கவுண்டமணி சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் முழுமுதல் காமெடியனாக களத்தில் குதித்திருக்கிறார்.

இன்றுவரை தமிழ் சினிமாவின் பல எவர் கிரீன் வசங்களுக்கு சொந்தக் காரரான கவுண்டரின் இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த பாலமுருகன் இயக்குகிறார்.

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற புகழ் பெற்ற வசனத்தையே தலைப்பாக வைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக் கொண்டே செல்கிறது கோடம்பாக்கத்தில்.மீண்டும் கவுண்டரின் நடிப்பு பிரவேசத்தால் கவுண்டரின்ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.

கவுண்டர் அண்ணா மீண்டும் வாங்கண்ணா தமிழ் சினிமாவில ஒரு ரவுண்டு...

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top