தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம்… நஷ்டம்… என்று கூக்குரல் எழுப்பி, அந்தப் படத்துக்கு தோல்விப்படம் என்ற முத்திரையை குத்த முயல்கிற துரதிஷ்டவசமான சம்பவங்கள் திரைப்படத்துறையில் தொடர்கதையாகி வருகிறது.
ரஜினி நடித்த ‘லிங்கா’ படம் வெளியாகி, மூன்றாவது நாளே, ‘லிங்கா’ படம் தோல்வியடைந்துவிட்டதாகவும்… அதனால் இத்தனை கோடி நஷ்டம் என்றும் சில விநியோகஸ்தர்கள் பிரச்சனையை ஆரம்பித்தனர்.
செய்திக்கு அலையும் மீடியாக்கள், இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க, பப்ளிசிட்டி ருசி கண்ட சில விநியோகஸ்தர்கள் அநியாயத்துக்கு ரஜினியை அசிங்கப்படுத்தினர்.
இப்படிப்பட்டவர்களிடம் வியாபாரம் செய்ததே தன் தகுதிக்கு இழுக்கு என்று நினைத்தோ என்னவோ… கூக்குரல் போட்ட விநியோகஸ்தர்களுக்கு சில கோடிகளைக் கொடுத்து வாயை அடைத்தார் ரஜினி.
ரஜினியிடமே நஷ்டஈடு வாங்கிவிட்ட கெத்தில் அடுத்தக் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, ஷாம், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் – புறம்போக்கு என்கிற பொதுவுடமை.
மிக சமீபத்தில் வெளிவந்த படங்களில் அற்புதமான படம் என்று அனைத்து ஊடகங்களினாலும், ரசிகர்களினாலும் கொண்டாடப்பட்ட இந்தப் படத்துக்கு, வழக்கமான வணிக சினிமாவுக்கான ஆரவாரமும்… பரபரப்பும் இல்லை என்பது உண்மைதான்.
அதையே காரணமாக வைத்து ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் கழுத்தை நெறிக்கும் வேலையை செய்யத் தொடங்கி உள்ளனர் – அப்படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள்.
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் வழக்கமான நாலாந்தரமான திரைப்படம் அல்ல.
மக்களைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் அக்கறை செலுத்துகிற, கவலைப்படுகிற மக்களுக்கான திரைப்படம்.
நாம் வாழுகிற சமூகத்துக்கான நற்செய்திகளை சுமந்து வந்த நல்ல திரைப்படம்.
இதையே புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தின் விமர்சனங்களில் பெருவாரியான ஊடகங்கள் பெருமையுடன் பதிவு செய்தன.
அந்த ஊடகங்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக இருந்தது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சி சில நிமிடங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது.
ஏன்… என்ன விஷயம்?
புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவிருந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்யத் திட்டமிட்டிருந் தனராம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் நிகழ்ச்சியையே ரத்து செய்துள்ளனர்.
நன்றி அறிவிப்பு என்று சொல்லப்பட்டாலும், அது ஒருவகையில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிதான் என்பதை அறிவுள்ளவர்கள் அறிவார்கள்.
இந்நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகள் புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்துக்கு விளம்பரமாகவே அமைந்திருக்கும்.
அதை நடத்தவிடாமல் தடுக்க முயன்றதின் மூலம், தங்களின் படத்துக்கு கிடைக்க வேண்டிய விளம்பரத்துக்கு தாங்களே வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, திரைப்படத்துறையில் தலைகாட்டும் இதுபோன்ற வன்முறைப்போக்கினை, கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது என்பது மறைமுகமாக அந்த வன்முறை வழியை அனுமதிப்பதற்கு சமமானது.
காதில் விழுகிறதா கலைப்புலி தாணு ஸார்?
சாட்டையைக் கையில் எடுங்கள்…!

0 comments:
Post a Comment