தமிழ் சினிமாவில் எப்போது சில புதிய முயற்சிகள் எல்லை தாண்டி செல்லும், அதை மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. இதை மனதில் வைத்து நிமேஷ் வர்ஷன் புதிய கதை களத்தை கையில் எடுத்து இயக்கியுள்ள படம் தான் திறந்திடு சீசே.
இப்படத்தின் டீசர், ட்ரைலர் வந்த போதே சமூக வலைத்தளங்களில் வைரல் தான். ஏனெனில் இன்றைய Soup Boys, Rich Girlsக்கு ஏற்றார் போல் ஏ வசனங்களுடன் செம்ம ரீச் காட்டியது. அதே படத்திற்கு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
கதைக்களம்
அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் எம்.ஜி.ஆர் திறந்துடு சீசே மந்திரத்தை போட்டவுடன் பணம், நகை மற்றும் சொர்க்கம் போல் இருக்கும் ஒரு குகை திறக்கும் அல்லவா? அதே போல் தான் படத்தின் ஆரம்பத்திலேயே இன்றைய இளைஞர்களின் சொர்க்கமாக கருதப்படம் ஒரு கிளப்பின் கதவு திறக்க அதில் ஆறடி குதிரையாக தன்ஷிகா எண்ட்ரி ஆகிறார். (படத்திலேயே அவரை அப்படி தான் சொல்றாங்க).
இவரை பார்த்தவுடன் தன் காம வலையில் விழ வைக்க வேண்டும் என நாராயண், வைரவன் ஸ்டாலின் ப்ளான் போட, அதற்கு ஏற்றார் போல் தன்ஷிகாவும் மூச்சு முட்ட குடிக்கின்றார். நேரம் ஆக ஆக போதை தலைக்கேறி பாத்ரூமில் விழுந்து கிடக்கிறார்.
அந்த இடத்திற்கு வரும் நாராயண், தன் நண்பன் வைரவன் ஸ்டாலினிடம் சொல்லி அவரை காப்பாற்ற, அதன் பின் தான் தெரிகிறது தன்ஷிகா கற்பழிக்கப்பட்டு இருக்கிறார் என்று. நாராயண், வைரவன் ஸ்டாலின் இவர்கள் மட்டுமே தன்ஷிகா கற்பழிக்கப்பட்ட நேரத்தில் அங்கு இருக்க, இவர்களில் யார் தன்ஷிகாவை கற்பழித்தார்கள்?
உண்மையாகவே அவர் கற்பழிக்கப்பட்டாரா? அப்படி இல்லை என்றால் அவர் ஏன் அப்படி சொல்ல வேண்டும் என பல டுவிஸ்ட் முடிச்சுகளை அவிழ்த்து நாட்டுக்கு முக்கியமாக தமிழ் நாட்டுக்கு ஏற்ற ஒரு பெரிய கருத்துடன் படம் முடிகின்றது.
படத்தை பற்றிய அலசல்
படம் ஆரம்பித்ததில் இருந்து ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்ற ஸ்லோகன் வந்து கொண்டே இருக்கின்றது. அதை எதற்கு கட் செய்ய வேண்டும், படம் முழுவதுமே கீழே Template ah வைத்திருக்கலாம். ஏனென்றால் படமே அதை பற்றி தான்.
படம் முழுவதும் ஒரு கிளப்பை சுற்றி தான் நடக்கிறது, அதில் எப்போதும் நாராயண், வைரவன் மட்டும் தான் இருப்பார்களா? வேறு யாருமே அங்கு வேலை செய்ய வில்லையா? என பல கேள்விகள் துரத்துகின்றது. நான் ஒரு Guts ஹீரோயின் என்று நிரூபித்துள்ளார், தன்ஷிகா. அதிலும் இரண்டாம் பாதியில் தான் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார்.
இப்படமே ஒரு சமுதாய விழிப்புணர்வு என்ற நோக்கத்தில் தான் இயக்கப்பட்டுள்ளது, அப்படியிருக்க, ஏன் சார் இத்தனை டபூள் மீனிங் வசனங்கள் என்று இயக்குனரை கேட்க தோன்றுகிறது.
படத்தில் பல இடங்களில் பெண்ணியம் தலை தூக்குகிறது. தன்ஷிகா ‘பொம்பள நான் எப்படி வேணாலும் இருப்பேன், நீங்க****(பீப்)போங்கடா’ன்னு ஷப்பா..பொண்ணு செம்ம ரைடு விட்டுள்ளது.
என்ன தான் தான் குடித்ததற்கு வைரவன் காரணம் சொன்னாலும், அதை பல இடங்களில் நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் நியாயம்?. இயக்குனர் மிஷ்கின் உதவியாளரா என்று தெரியவில்லை பல சிம்பாளிக் காட்சிகளும், காலுக்கு பின்னால் கேமரா ஓடும் காட்சிகளுமாக உள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் த்ரில்லாக, நாராயண் வசனத்துடன் நன்றாக இருக்கின்றது. மொத்த படத்தையும் தூக்கி செல்வது தன்ஷிகாவின் நடிப்பு தான். ஏஞ்சலினா ஜுலி காஸ்டியூமில் வந்து கலக்கியிருக்கிறார். கார்த்திக் ராகவேந்திராவின் பின்னணி இசை திகில் படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது.
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, ஆரம்பித்த வேகத்திலேயே முடிக்காமல், ஜவ்வாக இழுத்துள்ளனர். காமெடி காட்சிகளாக இருந்தாலும் டபூள் மீனிங் வசனங்களை குறைத்திருக்கலாம். பேமிலி ஆடியன்ஸ் வேண்டாமா பாஸ்.
மொத்தத்தில் திறந்திடு சீசே மந்திரம் இன்னும் அழுத்தமாக கூறியிருந்தால் வெற்றியின் கதவு திறந்திருக்கும்.

0 comments:
Post a Comment