அரசு ஆணையின்படி அப்போது செயல்பட்டு வந்த திட்டக் கமிஷனின் கீழ் ''இந்திய தனி மனித அடையாள ஆணையம்" 2009-ம் ஆண்டு ஜனவரி 28-ல் அமைக்கப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெறப்படும் விவரங்களோடு அவரவர் கை(கள்) ரேகை மற்றும் கண்ணின் கருவிழிப்படலம் ஆகியவற்றின் குறிப்புகளை இணைத்து ஒவ்வொரு குடிமகனுக்கும் தனி அடையாள எண் வழங்குவது இதன் நோக்கம்.
இதன் தலைமைப் பொறுப்பு பிரபல இன்ஃபோஷிஸ் இணை நிறுவனரான நந்தன் நீல் கேனியிடம் ஒப்படைக்கப்பட்டது.
முறையான சட்டங்கள் இயற்றப்படாத நிலையிலேயே இந்த ஆணையம், முதல் தனி அடையாள எண்ணை 2010, செப்டம்பர் 29-ல் மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள தெம்பாலி கிராமவாசி ஒருவருக்கு வழங்கி செயல்படத் துவங்கியது.
பின் ஆதார் திட்டத்திற்கான மசோதாவை பாராளுமன்ற மேலவையில் அப்போதைய காங்கிரஸ் அரசு 2010-ம் ஆண்டு டிசம்பர் 3-ல் தாக்கல் செய்தது. சிறிது நாட்களுக்குப் பின் அது பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
நிலைக்குழுவின் பரிசீலனை விரிவாகவும் ஆழமாகவும் ஒரு ஆண்டு காலம் நீடித்தது. ஏற்கெனவே பிரிட் டிஷ் அரசால் தொடங்கப்பட்டு பிறகு கைவிடப்பட்ட இதேபோன்ற தனிமனித அடையாள எண்ணுக்காக அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் விவரங்களை நிலைக்குழு ஆராய்ந்தது.
நம் நாட்டு நிபுணர்களின் கருத்துக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மனித உரிமை, குடிமையுரிமை தொடர்புடைய சட்ட மேதைகளின் நிலைப்பாடுகள் அலசப்பட்டன. திட்டக்கமிஷனின் கருத்துகளும், தனிமனித அடையாள ஆணையத்தின் விளக்கங்களும் பெறப்பட்டு பலவிவாதங்களும் நடந்தேறின.
இறுதியில் ஆதார் திட்ட மசோதாவை ஏற்பதிற்கில்லை என்ற தனது அறிக்கையை நிலைக்குழு, 2011-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகளில் முக்கியமான சில கீழே கொடுக்கப்படுகின்றன.
1. பரவலான சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத, முழு நம்பிக்கை கொண்டு சார்ந்திருக்க இயலாத தொழில்நுட்பம் மற்றும் பலவித அனுமானங்களையும் அடிப்படையாக வைத்து ஆதார் திட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது.
2. எந்தக் குறிக்கோளை அடைவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது என்பதில் தெளிவில்லை. (நந்தன் நீல்கேணி கூற்றுப்படி ஒரு நபரோடு ஒரு தனிப்பட்ட எண்ணை இணைப்பது இவ்வாணயத்தின் நோக்கம். அந்த எண் எந்த நோக்கத்தில் பயன்படுத்தப்படும் என்பது யார் அதைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களைப் பொறுத்தது.)
3. தனிமனித அடையாள எண் சம்பந்தப்பட்ட விபரங்களை பாதுகாப்பதற்கான சட்டம் இதுவரை இயற்றப் படவில்லை.
4. இந்த எண்ணைப் பெறுவதற்கு ஆள் மாறாட்டம் போன்ற குற்றங்கள் உதவலாம். இவைகளை இனம் கண்டு களைவதற்கான வழிமுறைகள் திட்டத்தில் இல்லை.
5. அடையாள எண்ணை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளைத் தடுக்கும் வழிகள் கூறப்படவில்லை.
6. திட்டத்திற்கு ஆகக் கூடிய செலவு பற்றிய விபரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இறுதியில், அரசு இத்திட்டத்தை மறுபரீசிலனை செய்து, குறைகளைக் களைந்து ஒரு திருத்த மசோதாவை கொண்டுவர வேண்டும் என்று நிலைக்குழு அறிக்கை கூறியது. அரசோ எந்த வகையான திருத்த மசோதாவும் கொண்டுவராமல் தன்னிச்சையாக திட்டத்தை முழு வீச்சில் அமுல்படுத்தத் தொடங்கியது.
கைரேகை, விழிப்படலப் பதிவுகள் நிபுணர்கள் கருத்து
ஆதார் திட்டம், ஒருவரின் தனிப்பட்ட அடையாளக் கூறுகளாக கருதும் கை விரல் ரேகை தவறின்றி அவரை இனம் காட்டுமா? இல்லை. தவறுகள் நேர வாய்ப்புகள் உண்டு என்கின்றனர் ஆய்வாளர்கள். 2009-ல் தனி மனித அடையாள ஆணையம் கூட்டிய பையோமெட்ரிக் ஸ்டான்டர்டு கமிட்டியின் அறிக்கையில் இந்த உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 120 கோடி இந்திய மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்தால், 15 சதவீத தவறுகள் நிகழலாம் என்று கருதப்படுகிறது.
இந்த ஆணையத்திற்கு உபகரணங்கள் மற்றும் இது தொடர்பான சேவை புரியும் 4ஜி ஐடென்டிட்டி சொலூ ஷன்ஸ்" நிறுவனம், 12 வயதுக்கு குறைவான குழந்தைகளும் 60 வயதுக்கு மேலான முதியவர்களும் கொண்டுள்ள கைவிரல் ரேகைகளின் பதிவுகள் நம்பகத்தன்மை உடையவை அல்ல என்கிறது. கை வினையாற்றும் தொழிலாளர்களின் கைவிரல் ரேகையும் இத்தகைய குறைபாடுடையதே என்கிறார் இந்த ஆணையத்தில் முக்கிய பணியாற்றும் உயர் அதிகாரி ராம் சேவாக் சர்மா.
பிரிட்டனில் மேற்கொண்ட ஆய்வுகளிலும் கை விரல் ரேகைப் பதிவுகளில் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாயிருக்கிறது. அமெரிக்காவில் எஃப்.பி.ஐ. தன்னுடைய கைவிரல் ரேகை தொகுப்பிலுள்ள ஒருவருடைய அடையாளத்தின் பேரில் அவரைத் தவறாக சிறையில் அடைத்த பின், நிஜக் குற்றவாளி பிடிபட்டு (அவரு டைய கை விரல் ரேகையும் இதேபோல் ஒத்திருக்க) விடுவிக்கப்பட்டார். இது நடந்தது 2004-ல் இதற்கு முன்பும் கை விரல் ரேகைக் குளறுபடியால் அமெரிக்காவில் 6 வருடம் சிறைவாசம் அனுபவித்துப் பின் மரபணு சோதனையின் விளைவாக விடுவிக்கப்பட்டார் ஸ்டீபன்ஸ் கோவன்ஸ் என்ற நபர்.
கண்ணின் கருவிழிப்படலப் பதிவுகளிலும், பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வுகளில் அதன் பயன்பற்றி ஒத்த கருத்து ஏற்படவில்லை. இந்தியாவிலோ இதுபற்றிய எந்த சோதனை முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆகவே தவறும் வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் இல்லை.
தனிமனித அடையாள எண்ணை தேசிய மக்கள் தொகைப் பேரேடுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதார் எண் இப்போதைய அரசு ஆணையின்படி ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் தேசிய மக்கள் தொகை பேரேட்டில் இணையும்போது, அது மறைமுகமாகக் கட்டாயப்படுத்தப்படுகிறது. இது மோசமான விளைவுகளுக்குச் சாதகமான வாய்ப்புகளை வழங்க வல்லது.
குறிப்பிட்ட மனிதர்களை மதவாரியாக இனம் கொள்ளவோ அல்லது பழிவாங்கும் நோக்குடனோ இந்த எண்ணைப் பயன்படுத்தலாம். ஆஸ்திரேலியாவும் சைனாவும் முதலில் அடையாள அட்டை வழங்க விரும்பினாலும் அதை அமல்படுத்தாமல் தள்ளி வைக்க, அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பொதுமக்கள் எதிர்ப்பால் இத்திட்டம் கைவிட வேண்டியதாயிற்று. பத்திரிகை மற்றும் ஊடகங்களினாலும் இதன் ஒவ்வொரு அம்சமும் அலசப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டார்கள்.
ஆதார் திட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுக்களை சுமார் 2 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தங்களது செப்டம்பர் 23, 2013 உத்தரவில் ''ஆதார் அட்டை பெறாத காரணத் திற்காக எந்த நபரும் துன்புறுத்தப்படக் கூடாது" என்று குறிப்பிட்டது மீண்டும் விரிவாக நீதிபதிகள் பி.எஸ். சௌஹான் மற்றும் ஜெ.செலமேஷ்வர் அடங்கிய பென்ச் ''அரசு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாது. ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் எல்லா அரசு உத்தரவுகளும் திரும்பப் பெற வேண்டும். இது அரசுமானிய (எரிவாயு மானியம் உள்பட) மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும்" என்று மார்ச் 2014-லும் எச்சரித்தது.
இவற்றையும் மீறி சில அரசு அலுவலகங்கள் ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்துவதைக் கேட்டறிந்த நீதிபதி ஜெ.செலமேஷ்வர், சென்ற மார்ச், 2015-ல் “நாங்கள் எந்தக் குறிப்பிட்ட அலுவலகத்தின் விதிமீறல்களை தனியாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. மத்திய அரசும் மாநில அரசுகளும் நீதிமன்றத்தின் செப்டம்பர் 23, 2013 ஆணையை மதித்து நடக்குமென எதிர்பார்க்கிறோம்.
இனி ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தும் எந்த அலுவலகமும் எங்கள் கவனத்திற்கு வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் அட்டையைக் கட்டாயப் படுத்துவது முற்றிலும் சரியானது அல்ல” என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
ஏன் அவசரம்?

0 comments:
Post a Comment