ரஜினி நடித்த வேடத்தில் அஜித்…! – ‘பாட்ஷா’ படத்தின் ரீமேக்கா ‘தல 56 ‘?

நின்றால் செய்தி…! உட்கார்ந்தால் செய்தி…!

இப்படியொரு வரம் அல்லது சாபம் எல்லா நடிகர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.

ரஜினிக்குப் பிறகு இளம் தலைமுறை நடிகர்களில் இப்படியொரு இடத்தைப் பிடித்தவர் அஜித்.

ரஜினி புதிய படம் தொடங்குவதற்கு முன் வதந்திகள் றெக்கைக்கட்டிப் பறக்கும்.

அவற்றில் எது உண்மை.. எது பொய் என்பது அதிகாரபூர்வமான செய்தி வரும்போதுதான் தெரியும்.

அதுவரை தினம் தினம் விதம்விதமான செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

ஏறக்குறைய அஜித் படங்கள் பற்றியும் இப்படித்தான்.

கடந்த சில வருடங்களாக ரிலீஸ் தேதிக்கு முதல்நாள்(?)வரை படத்தின் தலைப்பு பற்றி ரகசியம் காக்க ஆரம்பித்திருக்கிறார் அஜித்.

அதனால் சகட்டுமேனிக்கு அவரைப் பற்றியும்… அவரது படங்கள் பற்றியும்… வதந்திகளும்..

ஹேஸ்யங்களும்.. அனுமானங்களும்… செய்திகளாக உலா வருகின்றன.

அப்படியொரு செய்திதான் இது…!

இது உண்மையா என்பதை அஜித் உறுதிப்படுத்தினால்தான் உண்டு.

என்ன செய்தி?

என்னை அறிந்தால் படத்தை அடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும், தல 56 என்று குறிப்பிடப்படும் அந்தப் படம், சில வருடங்களுக்கு முன் ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான பாட்ஷா படத்தின் ரீமேக் என்பதே அந்த செய்தி!

இந்த விஷயத்தை படம் வெளியாகும்வரை யாரும் வெளியே சொல்லக் கூடாது…. ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அஜித் கேட்டுக் கொண்டதாகவும், அதனால் தால 56 பற்றி யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்றும் ஒரு தகவல்.

இது எந்தளவுக்கு உண்மையோ… உண்மை என்று நம்ப ஒரேயொரு விஷயம் இருக்கிறது.

தல 56 படம் அண்ணன்- தங்கச்சி சென்ட்டிமெண்ட் கதை என்ற தகவல் வெளியானது.

அதன்படியே அந்தப்படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.

பாட்ஷா படத்திலும் ரஜினிக்கும் தங்கை உண்டு.

இந்த ஒற்றுமையை வைத்து பாட்ஷா படத்தின் ரீமேக் இது என்று சொல்லலாமா? 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top