கமல்ஹாசன் நடிப்பில் உத்தமவில்லன் படத்தை அடுத்து பாபனாசம் படம் வெளிவரத் தயாராக இருக்கிறது.
இன்னொரு பக்கம், தூங்காவனம் என்ற பெயரில் தன் அடுத்தப் படத்தைத் தொடங்க இருக்கிறார் கமல்.
மே 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கமலே தெரிவித்திருக்கிறார்.
அவரது ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்தப்படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் எம். செல்வா என்பவர் இயக்குகிறார்.
தூங்காவனம் பட அறிவிப்பு கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் அதே நேரம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனை சோகத்திலும், வேதனையிலும் ஆழ்த்தி இருக்கிறது.
காரணம்.. தூங்காவனம் படத்தைத் தொடங்கியதன் மூலம் ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட, விஸ்வரூபம் – 2 படத்தை மேலும் கிடப்பில் போட்டிருக்கிறார் கமல்.
ஏற்கனவே கடன் பிரச்சனையில் வீடு, அலுவலகம், தியேட்டர் போன்ற சொத்துக்களை இழந்து நிற்கும் ஆஸ்கார் ரவிசந்திரன் கமலின் புதுப்பட அறிவிப்பைக் கேட்டு கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறாராம்.
அதுமட்டுமல்ல, தூங்காவனம் படத்துக்கு முன் தன்னுடைய படத்தை முடித்துக் கொடுக்கும்படி கமலிடம் கேட்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
அவரது கோரிக்கையை கமல் காது கொடுத்து கேட்பாரா என்பது சந்தேகம்தான்.
காரணம்.. இரண்டு பேருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்..!
கமலுக்கும் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கும் என்னதான் பிரச்சனை?
65 கோடி பட்ஜெட்டில் விஸ்வரூபம்-2 படத்தை கமல் தயாரித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம். அதன்படி இரண்டு வருடங்களுக்கு முன்பே ஏறக்குறைய பாதி பணத்தை…. அதாவது 33.5 கோடி ரூபாயை கமலுக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டார் ஆஸ்கார் ரவிசந்திரன்.
இத்தனை கோடியைக் கொடுத்த பிறகுதான், விஸ்வரூபம் படத்துக்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளை தொகுத்துத்தான் விஸ்வரூபம்-2 படத்தை கமல் எடுக்கிறார் என்றும், விஸ்வரூபம்-2 படத்துக்காக புதிதாக எடுக்க வேண்டிய காட்சிகள் மிக குறைவு என்றும் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு தெரிந்திருக்கிறது.
இந்த உண்மை தெரிந்ததும் கமலுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கிப்பணத்தை தர மறுத்துவிட்டார்.
பாக்கிப் பணத்தைத் தராததினால் விஸ்வரூபம்-2 படத்தை கமலும் கிடப்பில்போட்டுவிட்டு, உத்தமவில்லன், பாபனாசம் படங்களில் நடிக்கப்போய்விட்டார்.
ஏகப்பட்ட கோடிகளில் புரண்டு கொண்டிருந்த ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு கமலிடம் கொடுத்த 33.5 கோடி பெரிய தொகையாகத் தெரியவில்லை. இன்றைக்கு எல்லாவற்றையும் இழந்து கடனாளியாகி நிற்கிறார்.
எனவே எப்படியாவது விஸ்வரூபம்-2 படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையில் உத்தமவில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமிக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதுமட்டுமல்ல 45 கோடிக்கு மேல் அந்தப் படத்தை பிசினஸ் செய்ய முடியவில்லை.
இதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்த ஆஸ்கார் ரவிசந்திரன், கமலின் அண்ணன் சந்திரஹாசனை சந்தித்து கமலுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இன்னும் 8 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் விஸ்வரூபம்-2 படம் முடிந்துவிடும். எனவே, தான் தர வேண்டிய 31.5 கோடியில் 20 கோடியை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பாக்கி 11.5 கோடியை உடனே எற்பாடு செய்து தருவதாகவும், படத்தை முடித்துக் கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார்.
சந்திரஹாசனோ 20 கோடியை குறைத்துக்கொள்ள கமல் உடன்பட மாட்டார். 5 கோடியை வேண்டுமானால் குறைத்துக்கொள்ளும்படி கமலிடம் சொல்வதாக கூறி இருக்கிறார்.
ஆனாலும் தன் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார் ஆஸ்கார் ரவிசந்திரன்.
கமல் சொல்லும் பதிலில்தான் விஸ்வரூபம் – 2 படத்தின் தலை எழுத்தே இருக்கிறது.

Finally, you have realized the full page ad is a bad user experience.
ReplyDelete