எனக்கு கொடுக்குற 2 கோடியை ஏழைங்ககிட்ட இருந்து தானே வாங்குவீங்க..?


எனக்கு கொடுக்குற 2 கோடியை ஏழைங்ககிட்ட இருந்து தானே வாங்குவீங்க..? வேட்டி கம்பெனிக்காரனை ஓடவிட்ட ராஜ்கிரண்

ரசிகர்கள் எக்கேடு கெட்டால் என்ன நமக்கு பணம் வந்தால் போதாதா என்கிற சுயநலத்தோடு உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பன்னாட்டு குளிர்பான விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் தனக்கு வந்த வேட்டி விளம்பரத்தை கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கிறார் நடிகர் ராஜ்கிரண்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது :

நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். ‘மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் ‘ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

‘நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. ‘வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!”

நீங்கதாங்க ரசிகர்களோட உண்மையான ஹீரோ!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top