உத்தம வில்லன் ஷோ! ஆஹா ஓஹோ ஆடியன்ஸ்!

இன்னும் படமே ரிலீஸ் ஆகல. அதற்குள் எங்கிருந்து வந்தாங்க ஆடியன்ஸ்? இப்படியொரு கேள்வியோடுதான் இந்த செய்தியை அணுக வேண்டியிருக்கிறது. ஆனாலும், இது பிரத்யேக ஷோ என்றால், புரிந்து கொள்ளும் தமிழுலகம்!

இன்று சென்னையில் தனது வெல்விஷர்களுக்கு மட்டும் உத்தமவில்லன் படத்தை திரையிட்டாராம் லிங்குசாமி. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த படமல்லவா? தனது நெருங்கிய நண்பர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்கிற ஆசை இருக்குமல்லவா? தனது மனசுக்கு நெருக்கமான, அதே நேரத்தில் உண்மையை படீரென்று போட்டு உடைத்து சொல்லக்கூடிய நண்பர்களை அழைத்தாராம் லிங்குசாமி.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களின் முகத்தில் பிரமிப்பு அடங்கவில்லையாம். இன்று டான்ஸ் மாஸ்டருக்கு நிகராக ஸ்டெப் வைக்கும் விஜய், தனுஷ் போன்ற இளம் நடிகர்களுக்கே சவால் விடுகிற அளவுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறாராம் கமல். (முன்னொரு காலத்தில் அவரே ஒரு டான்ஸ் மாஸ்டர்தானே)

அதற்கப்புறம் படம் என்ன மாதிரியான வரையறைக்குட்பட்டது என்கிற கேள்வியும் எழுமல்லவா? அதற்கான விமர்சனமாகவும் இருந்ததாம் அவர்களின் பாராட்டு. பஞ்சதந்திரம் போன்ற வரிசையில் இடம் பெறக்கூடிய வயிறு வலிக்க வைக்கும் காமெடியில் அசத்துறாரே கமல் என்றார்களாம் அத்தனை பேரும்.

இவ்வளவு பாராட்டுகளும் நொடியில் இன்டஸ்ட்ரியில் பரவிக்கிடக்க, எல்லா உள்ளங்களும் வில்லனுக்காக வெயிட்டிங்!

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top