சிம்பு கௌதம் இணையும் அச்சம் என்பது மடமையடா


அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் இயக்குநர் கௌதம் வாசுதேவ். இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே கேள்விப்பட்ட ஒன்றுதான். இந்தப் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்த பின்பு கடைசியாக ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்திருக்கிறார்களாம். இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ஏஆர் ரஹ்மான். விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு, ரஹ்மான், கௌதம் வாசுதேவ் இணைந்திருப்பதால் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top