எனக்குள் ஒருவன் - ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம் - விமர்சனம்!

தமிழ் சினிமா என்றால் எப்போதும் காதல், மரத்தை சுற்றி டூயட் என ஓடி திரிந்த காலம் போக, சில அற்புத படைப்புகள் வருவது அரிது. அந்த வகையில் 2013ம் ஆண்டு மிக குறைந்த பட்ஜெட்டில் கன்னடத்தில் எடுக்கப்பட்ட படம் தான் லூசியா.

இதன் தமிழ் பதிப்பு தான் எனக்குள் ஒருவன். அறிமுக இயக்குனர் பிரஷாத் ராமர் இயக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைப்பில், சித்தார்த், தீபா சன்னிதி, சிருஷ்டி ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

கதை

திரையரங்கு ஒன்றில் வேலை பார்க்கும் ஏழை குடும்பத்து இளைஞனாக சித்தார்த். இப்படி தான் படத்தின் கதை ஆரம்பிக்கின்றது. இவர் தினமும் தூக்கம் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார். தன் தூக்கத்தையும், ஏக்கத்தையும் தேடி அழையும் இவருக்கு கிடைப்பது தான் லூசியா என்ற மாத்திரை.

இதை சாப்பிட்ட பிறகு ஹாலிவுட் படமான இன்ஸ்சபெஷன் ஸ்டைலில் கனவு உலகத்திற்கு செல்ல, அங்கு அனைவரும் விரும்பும் பெரிய நாயகனாக வலம் வருகிறார் சித்தார்த்.

இந்த கதையில் என்னென்ன கதாபாத்திரங்கள் வருகிறதோ, அதே கதாபாத்திரங்கள் கனவுலகிலும் வருகிறது. அது மட்டுமில்லாமல், இங்கு அவருக்கு நடக்கும் சம்பங்கள் சற்று மாறுதலுடன் அங்கும் அரங்கேறுகிறது. ஆனால், இரண்டிலும் ஒரே கரு காதல். தீபா சன்னிதி காதல் சித்தார்த்தை எந்தளவிற்கு கொண்டு செல்கிறது என்பதே படத்தின் ஆணி வேர்.

இந்த நிஜம் மற்றும் நிழலில் நடக்கும் சம்பவங்கள் தான் இதில் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இறுதியில் அவர் அதிலிருந்து வெளிவந்தாரா? என்ன ஆனது? என்பதை மிகவும் எதிர்பாராத சஸ்பென்ஸுடன் கூறியுள்ளனர்.

நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு

சித்தார்த் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளார். படத்தின் கதாநாயகியாக வரும் தீபா சன்னதியும் இந்த இரண்டு கதைகளிலும் வேறு வேறு கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக வரும் சிருஷ்டி வழக்கம் போல் வந்து போகும் கேரக்டர் தான்.

திரைக்கதையில் நான்லீனியர் என்று அழைக்கப்படும் வகையில் இரண்டு விதமான திரைக்கதை, ஒரு முடிச்சில் சந்திப்பது போல் தான் இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். ஒரு ஆங்கில படத்திற்கு நிகராக பின்னணியில் கலக்கியுள்ளார். பாடல்கள் அத்தனையும் ரசனை. ஒளிப்பதிவிலும் ஒரு கதை கலர்புல் ஆனால், அவன் வாழ்க்கை இருட்டு, இன்னொரு கதையை ப்ளாக் அண்ட் ஒயிட்டில் காட்டியுள்ளனர். அவன் பணம், பங்களா என பணக்கார வாழ்க்கை வாழ்கிறான்.

இவை இரண்டையும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளனர். குணச்சித்திர நடிகர் என்றாலே இனி நரேன் தான் அனைவருக்கும் முதல் சாய்ஸ் என்று சொல்லும் அளவிற்கு நன்றாக நடித்துள்ளார்.

க்ளாப்ஸ்

இது போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கே முதலில் சித்தார்த்திற்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம். அதில் அவர் தன் முழு முயற்சியையும் கொடுத்துள்ளார். நாயகி தீபாக்கு இது தான் முதல் படம் ஆனால், எந்த ஒரு இடத்திலும் அப்படி தெரியவில்லை.

முன்பே கூறியது போல், காதல் படங்களை எப்போதும் ஆட்டம், பாட்டம் என பார்த்து வந்த நமக்கு, இரண்டு விதமான களத்தில் பயணிக்க வைத்துள்ளனர். அதிலும் தியேட்டரில் வேலை பார்க்கும் சித்தார்த் கேரக்டர் அனைவரையும் எளிதில் ஈர்க்கிறது.

சந்தோஷ் நாரயணனை, ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் புகழ்ந்துள்ளார், அந்த பெயரை அவர் எப்போதும் காப்பாற்றுவார் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம். என்ன கொஞ்சம் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இசை போல் உள்ளது. ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலம். கதைக்குள் நம்மை ஒன்றிக்க வைக்கிறது.

பல்ப்ஸ்

சாமனிய மனிதர்கள் இந்த கதையை புரிந்து கொள்வார்களா என்பது சந்தேகம். படம் என்ன தான் ஹாலிவுட் ஸ்டைலில் இருந்தாலும், திரைக்கதையில் புதுமை சேர்த்திருந்தாலும், அவ்வபோது படத்தை யாராவது நகர்த்தி கொண்டு போங்க என்று சொல்லும் அளவிற்கு சில இடங்களில் சோர்வை உண்டு செய்கிறது.

மொத்தத்தில் கண்டிப்பாக இந்த புது முயற்சிகாக ஒரு முறை சித்தார்த்தின் கனவுக்குள் நாமும் சென்று வரலாம், உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும்

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top