என் இடத்தை யாரும் பிடிக்க முடியாது! -வடிவேலு அதிரடி

கவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணி நீண்டகாலமாக வலம் வந்த நிலையில், அவர்களைத் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே படத்தில், போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு -என்ற பாடல் மூலம் என்ட்ரி கொடுத்த வடிவேலு பின்னர் கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடியன் ஆனார்.

ஆனால், அரசியல் புயலில் சிக்கிய பிறகு ஸ்டெடியாக இருந்த வடிவேலுவின் காமெடி மார்க்கெட் ஆட்டம் கண்டது. அதையடுத்து அவர் மீண்டும் எழுந்து வந்தபோதும், இனிமேல் அவரால் பழைய இடத்தை பிடிப்பது நடக்காத காரியம் என்கிறார்கள். அதோடு அவர் இடத்தை சந்தானமும், சூரியும் கைப்பற்றி விட்டதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் வடிவேலுவோ, சினிமாவில் எனக்கான இடம் இன்னும் அப்படியேதான் உள்ளது. என் இடத்தை பிடிக்கிற அளவுக்கு காமெடியன் இங்கே யாருமில்லை. இனி வரப்போவதும் இல்லை. அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் காலியாகவே இருக்கும் எனது சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு பயணிப்பேன் என்கிறார்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top