தமிழ்சினிமாவில் காதலுக்கு அடுத்தபடியாக அதிகம் சொல்லப்பட்டது நட்பு பற்றித்தான்.
ஆனாலும் புதுவசந்தம் போல் வெகு சில படங்களே சிறந்த நட்புப்படங்களுக்கான சாட்சியாக மனதில் நிற்கின்றன.
இனி ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கையும் நினைவில் நிற்கும்.
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் சர்வானந்த் பார்ட்டி , தண்ணி என்ற வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கிறார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்துவிட்டு நண்பர்களுடன் பைக்கில் வரும்போது ஏற்படும் விபத்தில் நண்பனை பறிகொடுக்கிறார்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு சர்வானந்திடம் மாற்றம்.
சீக்கிரமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான்.
க்ரியேட்டிவ்வாக சிந்திக்கிறார். புதுப்புது தொழில்களில் பணம் கொட்டுகிறது.
தங்கையை வசதியான இடத்தில் கட்டிக்கொடுக்கிறார். தன் குடும்பத்தினரை வசியாக வாழ வைக்கிறார்.
விபத்தில் இறந்த அவனது நண்பனின் குடும்பத்துக்கும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறான்.
தோழியாய்… அலுவலகத்தில் சக ஊழியையாய்… அவனோடு இருக்கும் நித்யா மேனனுக்கு ஓய்வே இல்லாமல் சர்வானந்த் உழைத்துக் கொண்டே இருப்பது எரிச்சலடைய வைக்கிறது.
இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்… நம்ம இலக்கை அடைஞ்ச பிறகு ரிலாக்ஸ்டா இருக்கலாம் என்று சமாளிக்கிறார் சர்வானந்த்.
என்ன இலக்கு என்று தெரியும்போது உடைந்துபோவது நித்யா மேனன் மட்டுமல்ல, நாமும்தான்.
பறவைகளுக்கு மட்டும் தனது மரணத்தை முன்னரே உணரும் சக்தி இருக்கிறது. அவை தன் மரணத்தை உணரும்போது பறவைக் கூட்டத்துக்கு பாரமாக இருப்பதில்லை, கூட்டத்தைவிட்டு விலகி தனிமையில்… அமைதியாக மரணத்தை எதிர்கொள்கின்றன.
என்றொரு கதை சொல்லி சர்வானந்தின் ஓட்டத்துக்கான காரணத்தைச் சொல்கிறார் சேரன்.
கம்பெனியை நித்யா மேனனின் பெயரில் எழுதி வைத்து விடு, மற்ற நண்பர்களையும் பங்குதாரர்கள் ஆக்கி விட்டு, வெளிநாட்டுக்குப் போகிறார் சர்வானந்த்.
இனி அவன் திரும்பி வரவே மாட்டான் என்பது தெரிந்த நித்யாவைப்போலவே நாமும் கலங்கிப்போகிறோம்.

0 comments:
Post a Comment