இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் ஸ்பெஷல் என்ன?

தமிழ் சினிமாவின் தற்போதையே ட்ரண்டே காமெடி தான். அந்த காமெடியில் விவேக் ஸ்டைலில் கருத்துடன் சொன்னால், எல்லோரிடத்திலும் எளிதில் ரீச் ஆகும். இந்த வகை படமாக தான் இந்த இவனுக்கு தண்ணில கண்டம்.

படத்தின் முதல் ஸ்பெஷலே தீபக். சின்னத்திரையில் இருந்த வெள்ளித்திரை வந்து வெற்றி கொடு நாட்டிய சிவகார்த்திகேயனை தொடர்ந்து தீபக்கும் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

மூடர் கூடம் படத்தின் மூலம் நம் மனதை கவர்ந்த செண்ட்ராயன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும், படம் முழுவதும் பெரும்பாலான காட்சிகளில் ஆங்கிலத்தில் பேசி கலக்கியுள்ளார்.

இவர்களையெல்லாம் விட 30 நொடி டீசரிலேயே படத்திற்கு ஹைப் ஏற்றியவர் மொட்டை ராஜேந்திரன் தான். இவரின் கெட் அப், வசன உச்சரிப்பு என காமெடிக்கு செம்ம விருந்து கேரண்டி.

படத்தின் தலைப்பு காமெடியாக இருந்தாலும் இதில் ஒரு முக்கியமாக கருத்து மறைந்து இருக்கிறது. அதை அறிய மார்ச் 13ம் தேதி வரை காத்திருங்கள்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top