லிங்கா படத்தால் நஷ்டமாகி விட்டது என்று போராட்டத்தில் குதித்த தமிழக வினியோகஸ்தர்கள் அந்த விவகாரத்தில் ரஜினியின் பெயரை எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்தளவுக்கு டேமேஜ் செய்து விட்டார்கள்.
இதனால் வருத்தப்பட்ட ரஜினி அந்த சரிந்து போன இமேஜை தூக்கி நிறுத்தவும், அந்த வினியோகஸ்தர்களுக்கு பதிலடி கொடுக்கவும் உடனடியாக அடுத்த பட வேலையை முடுக்கி விட்டிருக்கிறாராம்.
ரஜினியை வைத்து படமெடுக்கும் அந்த பெரும் பாக்கியம் ஐ படத்தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரனுக்கு கிடைத்திருக்கிறது.அந்த நிறுவனத்தின் சமீபத்திய ரிலீசான ஐ நல்ல வசூலைத் தந்தாலும் அதனால் தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லையாம்.
இந்த நேரத்தில் ரஜினியே முன்வந்து கால்ஷீட் கொடுக்கவும் குஷியாகி விட்டது ஆஸ்கார் பிலிம்ஸ்.தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் ரிலீசான ‘ஸ்டாலின்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்த இந்த நிறுவனம் இப்போது இப்படத்தில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழிலும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸே இயக்கட்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஆரம்பிப்பது சரி ஆனால் ஒரே ஒரு கண்டிஷனை மட்டும் நீங்களே கேட்டே ஆக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.
அதென்ன கண்டிஷன்?
எக்காரணம் கொண்டும் இந்தப்படத்தை வினியோகஸ்தர்களுக்கு அவுட்ரேட் முறையில் விற்கக் கூடாது. எம்ஜி அடிப்படையிலும் தியேட்டருக்கு தரக் கூடாது. நீங்களே நேரடியாக ரிலீஸ் செய்யுங்கள் என்பது தான் அவர் போட்டிருக்கும் ஒரே கண்டிஷன்.வேறென்ன செய்ய..?
அவரை வினியோகஸ்தர்கள் படுத்திய பாடு அப்படி!

0 comments:
Post a Comment