என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
இந்த படம் 1991–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் ராஜ்கிரண், மீனா ஜோடியாக நடித்து இருந்தனர். கவுண்டமணி, செந்தில், வடிவேலுவும் நடித்து இருந்தார்கள். இளையராஜா இசையமைத்து இருந்தார். கஸ்தூரி ராஜா இயக்கினார்.
இந்த படத்தில் இடம் பெற்ற குயில் பாட்டு, பாரிஜாத பூவே, பெண் மனது ஆழம் என்று, போடா போடா புண்ணாக்கு, சோளபசுங்குயிலே போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.
வடிவேலு இந்த படத்துக்கு பிறகுதான் பிரபலமானார். போடா போடா புண்ணாக்கு பாடலை அவர் பாடி இருந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது என் ராசாவின் மனசிலே படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க ராஜ்கிரண் திட்டமிட்டு உள்ளார்.
அவரே இரண்டாம் பாகத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த மீனாவையே இதிலும் நாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்னர். இதற்காக அவரிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இளையராஜாவே இதற்கும் இசையமைப்பார் என தெரிகிறது.

0 comments:
Post a Comment