வேகமாக வளர்ந்துவரும் விஜய் ஆண்டனியின் சைத்தான்


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் 'சைத்தான்'.

விஜய் ஆண்டனி நடிப்பில் 'நான்', 'சலீம்' ஆகிய இரு படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ஆனந்த் இயக்கும் 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துவருகிறார்.இப்படத்துக்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். விஜய் ஆண்டனியின் படத்துக்கு இன்னொருவர் இசை அமைப்பது இதுதான் முதல் முறை. தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்த சுஷ்மா ராஜ் தமிழில் அறிமுகமாகிறார்.

இதற்கிடையில், இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரதீப் இயக்கும் 'சைத்தான்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். சைக்காலஜிகல் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடிக்கிறார். சென்னையில் தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இதைத் தொடர்ந்து சசி இயக்கும் 'பிச்சைக்காரன்' படத்திலும், 'சலீம் பார்ட்-2' படத்திலும் விஜய் ஆண்டனி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top