ஈழ உணர்ச்சியை பணயம் வைத்து ஜெயித்தாரா ஜெசிக்கா?

தென்னிந்தியாவின் மிகப்பெரிய குரல்தேர்வு போட்டியான சூப்பர்சிங்கரில் முதன்முறையாக ஈழத்தைச் சேர்ந்த ஜெசிக்கா இரண்டாம் இடத்தை பிடித்தார்.

பரிசாக அவருக்கு கிடைத்த 1 கிலோ தங்கத்தை கூட இந்தியாவில் உள்ள அனாதை குழந்தைகளுக்கும், ஈழத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கும் தானமாக வழங்கி விட்டார்.

ஆனால் ஜெசிக்கா ஈழ உணர்ச்சியை மையமாக வைத்து தான் ஜெயித்தார் என்றொரு கருத்தை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதை எதிர்த்து பலர் தங்களது விமர்சனங்களை கூறியுள்ளனர்.

அந்தவகையில் அவர்கள் கூறியதாவது, ஜெசிக்கா பாடிய ஒவ்வொரு சுற்றிலும் “எக்ஸ் மச்சி வை மச்சி”, “நெஞ்சினிலே நெஞ்சினிலே”, “அட என்னாத்த சொல்வேனுங்கோ” என எல்லாவகையான இசை வடிவங்களிலும் பாடித் தான் தனது திறமையை நிருபித்துள்ளார்.

Wild Card சுற்றில் தான் மக்களிடம் ஓட்டு கேட்டார். அப்போதும் கூட தான் ஒரு ஈழத்து பெண் என்று கூறி ஓட்டுக்கேட்கவில்லை. நான் திறமையானவள் என நீங்கள் நம்பினால் எனக்கு வாக்களியுங்கள் என்று தான் கேட்டிருந்தார்.

எனவே வளர்ந்து வரும் ஒரு ஈழத்து பெண்ணை காயப்படுத்தவேண்டாம் என கூறியுள்ளனர்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top