டங்காமாரியைத் தொடர்ந்து டண்டனக்கா!

அனேகன்’ பட பாணியில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் சென்னை தமிழில் அட்ராசிட்டி பாடல் இடம்பெற உள்ளது.  ‘டங்காமாரி’ பாடலை எழுதிய ராக்கேஷ் ஜெயம் ரவி-ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் டி.இமான் இசையில் பாடியுள்ளார் . ‘டண்டனக்கா’ என்று தொடங்கும் அந்த பாடல் , ‘டங்காமாரி’ பாடலைப் போன்று  பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

‘ரோமியா ஜுலியட்’ படத்தை லட்சுமண் என்பவர் இயக்குகிறார். கூடிய விரைவில் படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். மேலும் படத்தின் இந்த சிறப்பு பாடலை நாளை வெளியிட உள்ளனர்.

இந்த வருடத்தில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் இப்படம் காதல் , ரோமாண்டிக் சார்ந்த படமாக உருவாகி வருகிறது. 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top