நேதாஜி வரலாற்றைப் படமாக்கும் சரத்குமார்


மறைந்த நேதாஜியின் கதையினை படமாக்கும் முயற்சி சரத்குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக நேதாஜியின் மகளை சந்தித்து பேசியிருக்கிறார்.

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் 'சண்டமாருதம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் சரத்குமார்.

இந்நிலையில், உங்களுடைய ட்ரீம் ரோல் எது? என்ற கேள்விக்கு நேதாஜி என்று பதிலளித்து வந்தார் சரத்குமார். தற்போது அதற்கான பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார். இதற்காக நேதாஜியின் விவரங்கள் அனைத்து தொடர்ச்சியாக சேகரித்து வருகிறார்.

நேதாஜியின் மகளை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். விரைவில் பிரம்மாண்டமான முறையில் நேதாஜியின் கதையினை திரைப்படமாக்க இருக்கிறார்.

இந்தாண்டு இறுதிக்குள் இதற்கான பணிகள் துவங்கப்படும் என்று சரத்குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. யார் இயக்கவிருக்கிறார், சரத்குமாருடன் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top