என் தோற்றத்திற்கு அங்கீகாரம் கொடுத்தவர் பாலுமகேந்திரா - தனுஷ்!

''துள்ளுவதோ இளமை'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவையும் தாண்டி, பாலிவுட் சினிமா வரை போய் ஓர் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார் தனுஷ். சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பங்கேற்றார்.

அப்போது மறைந்த இயக்குநரும், ஔிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பற்றி பேசுகையில், நான் முதன்முதலில் சினிமாவுக்கு வந்தபோது, ''என்னை பார்த்து இவன் எல்லாம் நடிகனா...? என்று பலரும் விமர்சித்தபோது, எனது முதல்படமான துள்ளுவதோ இளமை படத்தின் டிரைலரை பார்த்தே இவன் பெரிய ஆளாக வருவான் என்று பாராட்டினார் பாலுமகேந்திரா.

மேலும், அவரது ''அது ஒரு கனா காலம்'' படத்தில் என்னை ஹீரோவாகவும் நடிக்க வைத்தார். என் தோற்றத்தை பார்த்து பலரும் விமர்சித்த போது, எனது தோற்றத்திற்கு முதன்முதலில் அங்கீகாரம் கொடுத்தவர் பாலுமகேந்திரா தான் என்று கூறினார் 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top