ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ்?


வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரகனி, கருணாஸ், ஸ்ரீமன், வித்யூலேகா ராமன் என பலர் நடிக்கின்றனர். வெங்கட் பிரபு படங்கள் என்றாலே சற்று ஜனரஞ்சகமாக இருப்பது தெரிந்த விஷயம் தான்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்திற்கி கேமரா ஆர்.டி.ராஜசேகர். விரைந்து படப்பிடிப்புகள் நடந்துவரும் நிலையில் படம் மே 1ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இதே நாளில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஹ், சமுத்திரகனி, சூரி நடிக்கும்’ரஜினி முருகன்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே மே 1ம் தேதியில் தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்விரு படங்களில் இசை மற்றும், டீஸர், டிரெய்லர்கள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top