மதுரையில் ஓட்டல் நடத்தும் நபர் - எலி படத்தை தயாரிக்கிறார்!

ரீ-என்டரியில் தெனாலிராமன் படம் மெகா ஹிட்டாகி வடிவேலுவின் ஹீரோ மார்க்கெட்டை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் தோல்வியடைந்து விட்டது. அதனால் அடுத்தபடியாக வடிவேலுவை வைத்து படம் தயாரிக்கப்போவதாக க்யூவில் நின்ற தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

ஆனபோதும், தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜை வைத்தே அடுத்து எலி படத்திற்கான கதையை தயார் செய்து அந்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் வடிவேலு. ஆனபோதும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் கிடைக்காமல் சில மாதங்களாகவே அந்த படம் இழுபறியில் நின்று கொண்டிருந்தது.

அதையடுத்து, தனது சொந்த ஊரான மதுரையில் ஓட்டல் நடத்தும் ஒரு நபரை பிடித்து இப்போது எலி படத்தை தயாரிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. அதுமட்டுமின்றி, அந்த படத்தை 15 கோடியில் தயாரிக்கிறார்கள். வடிவேலுவுக்கு மட்டும் 7 கோடி சம்பளமாம். ஆக, இதற்கு முன்பு வடிவேலு நாயகனாக நடித்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் எலி தயாராகிறது.

மேலும், தன்னுடன் காமெடி செய்து வந்த நடிகர் நடிகைகளை தொடர்ந்து கூட்டணி சேர்த்துக்கொண்டு வந்த வடிவேலு. இந்த படத்தில் பழைய நடிகர்களில் கிங்காங் தவிர யாரையுமே சேர்த்துக்கொள்ளவில்லை. பழைய நடிகர்களை சேர்த்துக்கொண்டு காமெடி செய்தால் பழைய பாணி ஒட்டிக்கொண்டே வரும் என்பதனாலேயே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாராம் வடிவேலு.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top