சண்டமாருதம் -ஆர்.சரத்குமாரின் ''வந்தேமாதரம்!''

''ஆடுகளம்'' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் 'வௌ்ளாவி பொண்ணு' டாப்சி. இவர் இப்போது தமிழ், தெலுங்கை தாண்டி இந்தியிலும் பிரபலமாகி இருக்கிறார். அக்ஷ்ய் குமாரின் ''பேபி'' படத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்த டாப்சி இப்போது அங்கு சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், பி.கே., படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும், ''டங்கல்'' படத்தில், அமீர்கானின் மகளாக டாப்சி நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகட்டின் வாழ்க்கை படமாக இருக்கிறது. இதில் அவரது மகளாக நான்கு பேர் நடிக்க இருக்கின்றனர். அதில் ஒருவர் கீதா குப்தா. கீதா, மல்யுத்தத்தில் 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர். இவரது வாழ்க்கையும் படத்தில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது. அதன்படி அந்த ரோலுக்கு டாப்சி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளார்களாம். அதன்படி, மஹாவீராக அமீர் கானும், அவரது மகள் கீதாவாக டாப்சியும் நடிப்பார் என தெரிகிறது.
இதுநாள் வரை அண்ணன் - தம்பி, அப்பா - மகன், தாத்தா - பேரன்... என்றெல்லாம் இரட்டை வேடம் ஏற்று ஜெயித்த நடிகர் ஆர்.சரத்குமார், ஹீரோ - வில்லன் என இரட்டை வேடம் ஏற்று நடித்து வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் ''சண்டமாருதம்''. அதுவும் சரத்துக்கு ''ஏய்'' உள்ளிட்ட வெற்றிகளை தந்த ஏ.வெங்கடேஷின் இயக்கத்தில் வௌிவந்திருக்கிறது இப்படம் என்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது...!

வில்லன் சரத், கும்பகோணத்தில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவில், ஒரேநேரத்தில் 101 இடங்களில் பட்டாசுக்கு பதில் பாம் வெடித்து தீபாவளி கொண்டாட திட்டமிடுகிறார். அதற்காக சர்வதேச தீவிரவாதிகள் சகலருடனும் கைகோர்த்து கொண்டு காய் நகர்த்தும் சர்வ வல்லமை படைத்த சர்வேஸ்வரனாக, தன் படை பரிவாரங்களுடன், பண்ணாத அட்டூழியம் இல்லை, செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை..., கொலை கொடூரமில்லை... எனும் அளவிற்கு பக்காவாக பவனி வருகிறார்.

அவரை, பொள்ளாச்சி பக்கம் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து தன் குடும்பத்தில் தந்தை டெல்லி கணேஷ் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் என்-கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸாக இருக்கும் ஹீரோ சூர்யா-சரத், கூண்டோடு சுட்டு பொசுக்குவது தான் ''சண்டமாருதம்'' படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

சூர்யா-சரத், என்கவுன்ட்டர் போலீஸ் ஆபிசராக இளமை முறுக்கோடு செய்யும் சாகசங்கள் அதிரடி என்றால், அதைக்காட்டிலும் அதிரடியாகவும், அலப்பறையாகவும் இருக்கிறது அண்டர்கிரவுண்ட் தாதாவாக சர்வராஜ்யம் பண்ணும் வில்லன் சர்வேஸ்வரன்-சரத்தின் கெட்ட-அப்பும், பில்-டப்பும். அதிலும் சாதாரண வாட்டர்கேன் போடும் சரத், சக்ரவியூகம், ஓவியம் பற்றி பேசுவது பார்த்து, ஒரு நிமிஷம் யோசித்து பன்ச் டயலாக் அடிக்கும் வில்லன் சர்வேஸ்வரன்-சரத், ஹீரோ-சரத்தை காட்டிலும் ஒரு மடங்கு உயரம்!

ஹீரோ-சரத்தின் முறைபெண் மகாலட்சுமியாக வரும் மீரா நந்தன், போலீஸ் ஆபிசர் மின்மனியாக வரும் ஓவியா இருவருக்கும் இதுமாதிரி ஆக்ஷ்ன் படத்தில் வழக்கமாக தரப்படும் முக்கியத்துவத்தை காட்டிலும் ஒருபடி ஜாஸ்தியாக நடிக்கவும், இளமை துடிக்கவும் வாய்ப்பு தரப்பட்டிருப்பது சண்டமாருதம் படத்திற்கு மேலும் பலமாக இருக்கிறது.

சரத்தின் நண்பராகவும், கடமை தவறாத போலீஸ் அதிகாரியாகவும் வந்து, ரசிகர்களை பரிதவித்து வைக்கவிட்டுபோகும் சமுத்திரகனி, வில்லன் சரத்தின் நண்பர்கள் ஆர்.ஆர் - ராதாரவி, காதல் தண்டபாணி, செல்வமாக வரும் அருண் சாகர், வெண்ணிறாடை மூர்த்தி, தம்பி ராமைய்யா, சிங்கம் புலி, டெல்லி கணேஷ், நளினி, மோகன்ராம், ஜி.எம்.குமார், சந்தானபாரதி, வின்சென்ட் அசோகன், கானா உலகநாதன், இமான் அண்ணாச்சி, ஆதவன், ரேகா சுரேஷ் உள்ளிட்ட சகலரும் சண்டமாருதத்திற்கு பிரமாண்ட பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

சரத்குமாரின் கதை, கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் திரைக்கதை, ஜேம்ஸ் வசந்தனின் இசை, என்.எஸ்.உதய்குமாரின் ஔிப்பதிவு, வி.டி.விஜயனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், ஏ.வெங்கடேஷின் வசனமும், இயக்கமும், ''சண்டமாருதம்'' படத்தை ரொம்பவும் பிரமாண்டமாக காட்டியிருக்கிறது.

ஆனாலும், ஒவ்வொரு ஆக்ஷ்ன் படத்திலும் வரும் காட்சிகள், இப்படத்திலும் தவறாமல் ரீ-பிளேஸ் செய்யப்பட்டிருப்பதும், தொட்டுவிடும் தூரத்தில் ஹீரோவுக்கு வில்லனும், வில்லனுக்கு ஹீரோவும் அடிக்கடி வந்து போனாலும், அப்போதெல்லாம் சுடாத அவர்களது துப்பாக்கி, ஆக்ஷ்ன் பிளாக்குகளில் மட்டும் ''டம் டும்'' என்று வெடிப்பது, இந்துக்களின் புனிதமாக போற்றப்படும் காசி தீர்த்த குடுவையில் 'ஒஃபாலிசிகா' வெடிபொருளை வைத்து வில்லன்-சரத் வியாபாரம் செய்வது, உள்ளிட்ட ஒருசில குறைகள் என்னதான் புதுமை என்றாலும், புதிய மொந்தையில் பழைய கல்லாகவே சண்டமாருதத்தை காட்டுகிறது!

மொத்தத்தில், ''சண்டமாருதம்'' - 'கேப்டன்' விஜயகாந்த், 'ஆக்ஷ்ன் கிங்' ஆர்ஜூன் படங்களின் வரிசையில் 'சுப்ரீம் ஸ்டார்' ஆர்.சரத்குமாரின் ''வந்தேமாதரம்!''

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top