சுப்பர் சிங்கரில் நடந்த குழப்பம்! உண்மையை மறைத்ததா விஜய் டிவி?


அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்ந்திழுக்க கூடிய விஜய் டிவியின் சுப்பர் சிங்கரின் ஜூனியர் 4க்கான இறுதிச்சுற்று நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்ச்சியில் தனுஷ், சிவகர்த்திகேயன் என பல திரையுலக பிரபலங்களும், சித்ரா, மனோ, சங்கர்மகாதேவன் என பல முன்னணி இசை ஜாம்பவான்களும் நடுவர்களாக பங்கேற்றனர்.

இறுதிச் சுற்றில் பங்கேற்ற ஆறு குழந்தைகளுமே தனது முழு திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக பாடி அசத்தினர். நிகழ்ச்சி நடைப்பெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில் மக்களின் வாக்கு ஒரு கோடியை தாண்டி இன்னும் வந்து கொண்டு இருக்கின்றது என்று அறிவித்திருந்தனர். மேலும் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தவருடம் அதிகமான வாக்குகள் வந்ததாகவும் அறிவித்திருந்தனர்.

இதில் ஸ்பூர்த்தி முதல் இடத்தையும், ஈழத்துச்சிறுமியான ஜெசிகா இரண்டாம் இடத்தையும் பெற்றனர். ஆனால் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று விஜய் டிவி கூறவில்லை.

இதற்கு முன் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் மக்களின் வாக்குகளை அறிவித்த விஜய் டிவி, இந்த முறை ஏன் அதனை அறிவிக்கவிலை...? அதற்கான பின்னணி என்ன...? என்று ஆராய்ந்த போது, இரண்டாம் இடத்தை பெற்ற கனடாவில் வசித்து வரும் ஈழத்துச்சிறுமியான ஜெசிகாவுக்கே மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், அதை மறைக்கவே விஜய் டிவி வாக்குகளின் எண்ணிக்கயை கூறவில்லை எனவும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top