சூர்யாவின்
2டி எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஜோதிகா, ரஹ்மான், தேவதர்ஷினி
ஆகியோர் நடிப்பில் ரேஷன் ஆண்ட்ரூஸ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில்
உருவாகியிருக்கும் படம் 36 வயதினிலே. இது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற
ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் பதிப்பாகும்.
36 வயதான ஜோதிகா அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவரான ரஹ்மானுக்கு நீண்ட போராட்டத்துக்கு பின் அயர்லாந்தில் வேலை கிடைக்கிறது. அவரது கணவர் மற்றும் மகளுடன் அயர்லாந்து செல்ல அவரும் வேலைக்கு முயற்ச்சி செய்ய வயதை காரணம் காட்டி அவரை நிராகரிக்க, அவரது மகள் இதனால் ஏமாற்றமடைகிறாள். இதற்கிடையே அவருக்கும் அவர் கணவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன சண்டையில் அவர் வயதை காரணம் காட்டி அவமானப்படுத்த படுகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிகாவை விட்டு கணவரும் மகளும் அயர்லாந்துக்கு பிரிந்து போக, தனிமையில் தான் கல்லூரி காலத்தில் எப்படி இருந்தோம், ஆனால் இப்போது ஏன் இப்படியிருக்கிறோம் என அவர் என்ன, அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றமே மீதி கதை.
இந்திய பெண்கள் திருமணத்திற்க்கு பின் எப்படி தனது அடையாளங்களை இழந்து, தனது வாழ்நாள் அனைத்தையும் தனது குடும்பத்திற்க்கு அர்பணித்து, தனது கணவர் மற்றும் குழந்தைகளால் ஆதிக்கம் செலுத்த படுகிறாள் என்பதை அச்சு அசலாக படம் பிடித்து காட்டியதற்க்கு கதாசரியர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். விஜி வசனம் ஒவ்வொன்றும் எதார்தம் கலந்த நகைச்சுவையுடன் நச்சென இருக்கிறது. சந்தோஷ நாராயணன் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னனி இசையிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் வெள்ளி திரையில் ஜோதிகா, தனது எதார்த்த நடிப்பின் மூலம் தான் என்றும் சிறந்த நடிகை என நிரூபிக்கிறார். அவரது உடல்மொழியாகட்டும், முகபாவங்களாகட்டும் ஜோதிகாவை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக இதை செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ரஹ்மான், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
மொத்ததில் 36 வயதினிலேவை மீண்டும் நடிக்க வர தேர்ந்தெடுத்த ஜோதிகாவிற்க்கு மிகச்சரியாக அமைந்துள்ளது.
36 வயதினிலே – வாடி ராசாத்தி

0 comments:
Post a Comment