கங்காரு - விமர்சனம்- வெற்றி என்ற வேலியை தாண்ட தடுமாறுகிறது

 ٭ உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சை படங்களாக மட்டும் இயக்கி வந்த சாமி முதன் முறையாக பாசத்தை மடியில் சுமந்து இயக்கியிருக்கும் படம் தான் இந்த கங்காரு. தமிழ் சினிமாவில் குடும்ப பெண்களை எளிதில் ஈர்க்கும் ஆயுதம் செண்டிமெண்ட் தான்.

٭ இதில் குறிப்பாக தங்கச்சி செண்டிமெண்ட் என்றால் சொல்லவா வேண்டும்? பாகவதார் காலத்தியில் ஆரம்பித்து இந்த காலத்து பரத் வரை அக்கா, தங்கச்சி செண்டிமெண்டை தொடாதவர்கள் இல்லை, ஆனால், இதில் புதுமையாக ஓவர் பந்தா மட்டும் இல்லை பாசமும் கூட உடம்பிற்கு நல்லது இல்லை என்பது தான் படத்தின் கரு.

கதைக்களம்

1980களில் சினிமாவில் ஒரு குழந்தையை தூக்கி கொண்டு வந்து ‘அய்யா..ஏதாவது உதவி பண்ணுங்க...என் தங்கச்சிய நான் டாக்ட்ராக்குன்னும்’ன்னு சொல்ல, இதை பார்க்கிற பெரியவர் ஒருவர் தன் பெட்டிக்கடையிலேயே வேலை போட்டு கொடுக்க, பக்கத்து ஊரில் யாருடைய தங்கச்சிக்கு பாம்பு கடிச்சாலும், ஹீரோ தன் தங்கச்சின்னு நினைச்சு ஓடி வருவார்.

٭ இதை எதற்கு சொல்கிறோம் என்றால், மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களும் தான் இப்படத்தின் முதல் பாதி அந்த உதவி செய்யும் பெட்டி கடைகாரராக தம்பி ராமையா.

٭ என்ன இதில் ஹீரோ கொஞ்சம் இல்லை, அநியாயத்துக்கு முரடனாக வருகிறார். தங்கச்சி பிரியங்கா மீது முரட்டு பாசத்துடன் இருக்கும் ஹீரோ அர்ஜுனா, தங்கச்சி ஆசைப்பட்டால் என்பதற்காக அவள் மனதிற்கு பிடித்தவனை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.

٭ ஆனால், திடிரென்று ஒரு விபத்தில் அவர் இறந்து விட குடும்பமே சோக கடலுக்கு செல்கிறது. இதற்கிடையில் ஹீரோயின் வர்ஷாவை எப்படியாவது பாலியல் தொழிலுக்கு தள்ளி விட வேண்டும் என்று துடிக்கும் சொந்த அக்கா மற்றும் புரோக்கராக இருக்கும் கலாபவன் மணி ஆகியோரிடம் இருந்து ஹீரோ காப்பாற்றுகிறார்.

٭ இதை தொடர்ந்து இவர்கள் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கும் கலாபவன் மணிக்கு அர்ஜுனாவின் தங்கை மீது ஒரு கண்(ஆனால், இவர் தான் படத்தில் சீரியஸ் காமெடி வில்லன்). சரி மீண்டும் தன் தங்கச்சிக்கு அடுத்த மாப்பிள்ளை பார்க்க அவரும் கரண்டில் ஷாக் அடித்து இறக்கிறார்.

٭ எல்லோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இதற்கெல்லாம் ஒரே வழி ஊரை விட்டு கிளம்புவது தான் என்று வேறு ஊருக்கு வந்து தன் தங்கச்சி திருமணத்தை நடத்தி முடிக்க, அந்த இடத்திலும் அர்ஜுனாவின் தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஒரு விபத்து.

٭ இதையெல்லாம் தொடர்ந்து யார் இதை செய்கிறார்கள் என்று கண்டிபிடிக்க, போலிஸாக இயக்குனர் சாமியே வர, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றது. இந்த கொலையை செய்தது யார்? எதற்காக இதை செய்கிறார்? என்பது தான் மீதிக்கதை.

நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு

٭ ஹீரோ அர்ஜுனா என்ன தான் இயக்குனர் ’முறைடா... நல்லா முறை’ அப்படி சொன்னாலும் கொஞ்சமாவது எக்ஸ்பிரஷன் காட்டியிருக்கலாம். எல்லா காட்சிகளிலும் 6 அடி உயரத்தில் அங்கும் இங்குமாக அழைந்து கொண்டிருக்கிறார்.

٭ ஹீரோயின் வர்ஷாவிற்கு, பிரியங்காவை சமதானப்படுத்தவும், ஒரு பாடலில் மழையில் நனைந்து ஆடவும் தான் உதவியுள்ளார். ஆனால், பிரியங்கா தான் படத்தின் நாடி என்பதால் அதை உணர்ந்து நன்றாகவே நடித்துள்ளார். இவர்களையெல்லாம் விட, தம்பி ராமையா தான் செம்ம ஸ்கோர் செய்கிறார்.

٭ ராஜா ரத்தினத்தின் ஒளிப்பதிவு மலை பிரேதசங்களை அழகாக காட்டியுள்ளது. அட..இசை நம்ம பாடகர் ஸ்ரீநிவாஸ், சும்மா சொல்ல கூடாதுங்க பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் மெலடி மற்றும் குத்து பாடல் இரண்டுமே சூப்பர்.

க்ளாப்ஸ்

٭ படத்தின் இரண்டாம் பாதியில் வரும் போலிஸ் வில்லனை தேடும் காட்சிகள் கொஞ்சம் நிமிர வைக்கின்றது. தம்பி ராமையா தான் ஒரு சீனியர் நடிகர் என்பதை தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துள்ளார். கலாபவன் மணியின் நகைச்சுவை வில்லன் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

٭ பார்த்து பார்த்து சளித்து போன தங்கச்சி செண்டிமெண்ட் காட்சிகள். படம் இதை நோக்கி தான் செல்கின்றது என்பதை இடைவேளையின் போதாவது கூறியிருக்கலாம்.

٭ மொத்ததில் கங்காரு வெற்றி என்ற வேலியை தாண்ட தடுமாறுகிறது

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top