விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நடக்குமா? – தயாரிப்பாளர்கள் சங்கம் தடை!

சினிமாவை வைத்து கோடிகோடியாய் சம்பாதிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது.

தயாரிப்பாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு பல சேனல்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு சாட்டிலைட் ரைட்ஸை வாங்குகின்றன.

சாட்டிலைட் ரைட்ஸ் வாங்காத டிவி சேனல்களை திரைப்பட விழாக்களுக்கு அழைக்கக் கூடாது என்ற முடிவையும் சில மாதங்களுக்கு முன் எடுத்தனர்.

அதன் காரணமாக சில சேனல்கள் லோ பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க முன் வந்தன.

இந்த வகையில் சிறு முதலீட்டுப் படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள் சிலர் பலன் அடைந்தனர்.
பெரிய சேனல்கள் முதல் சின்ன சேனல்கள் வரை தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்தன.

விஜய் டிவி மட்டும் கடைசிவரை இந்த ஆட்டத்துக்கு வரவில்லை.

இது பற்றி பேசுவதற்கு அழைத்தாலும் விஜய் டிவி தரப்பிலிருந்து யாரும் வருவதில்லை.

அதனால் செம கடுப்பில் இருந்தனர் தயாரிப்பாளர்கள்.

இன்னொரு பக்கம், காபி வித் டிடி, அது இது எது, ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி போன்ற விஜய் டிவியின் ஷோக்களில் சினிமா புரமோஷன் என்ற பெயரில் நட்சத்திரங்களை தலை காட்ட வைத்து தயாரிப்பாளர்களிடம் பெரிய தொகையை பில் போட்டு வருகிறது விஜய் டிவி.

இந்த வகையில் தயாரிப்பாளர்களிடமிருந்து கணிசமாக பணம் வாங்கிய விஜய் டிவி, விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்த விஜய் அவார்ட்ஸ் மூலம் மட்டுமே விஜய் டிவிக்கு பல நூறு கோடிகள் லாபம் கிடைத்து வருவதாக சேனல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

இந்த விழாவுக்கு சினிமா நட்சத்திரங்களை திரட்டி ஷோ காட்டித்தான் இத்தனை கோடிகளை சம்பாதித்து வந்தது.

இன்னும் சில தினங்களில் 9 ஆம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வழக்கம்போல் திரைப்பட நட்சத்திரங்களை திரட்டும் வேலையில் பரபரப்பாக ஈடுபட்டிருக்கிறது விஜய் டிவி.

இந்த நேரத்தில் விஜய் டிவிக்கு செமத்தியாய் செக் வைத்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

அதாவது வருடத்துக்கு 25 படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவி வாங்க வேண்டும் என்று விஜய் டிவிக்கு நிபந்தனை விதித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதற்கு விஜய் டிவி மறுத்தால் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு சினிமாக்காரர்கள் செல்ல தடை விதிக்கப்படுமாம்.

மீறி செல்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்ற முடிவையும் எடுத்திருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்த இந்த நிபந்தனைக்கு விஜய் டிவி சொல்லும் பதிலில்தான் விஜய் அவார்ட்ஸ் நடக்குமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top