Keyboard-ஐ எப்படி Mouse போல பயன்படுத்துவது என்று தெரியுமா??

Mouse என்ற ஒரு அமைப்பு 1946ஆம் வருடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போ அதற்கு முன்பு எப்படி பயன்படுத்தியிருப்பார்கள் என்று தெரியுமா?

Keyboard தான் அப்போது Mouse ஆகப் பயன்படுத்தப்படது. எனினும், அப்போது இருந்த கணிப்பொறிகள் இன்றைய கணிப்பொறி அளவு வேகம் கிடையது என்பதால் Keyboad தொழில்நுட்பம் போதுமானதாக இருந்தது.

நாம் பயன்படுத்தும் Mouse செயலிழந்து விட்டால் தற்சமயத்திற்கு என்ன செய்வது என்று முழிக்காமல் பழைய முறையையே பயன்படுத்தலாம்.
உங்கள் Keyborad-ஐ எப்படி Mouse போல பயன்படுத்துவது என்று பார்க்கலாம். Windows 7,8 போன்றவற்றில் எப்படி இதனை மாற்றுவது என்பது குறித்து கீழே காணலாம்.
முதலில் கன்ட்ரோல் பேனலை ஓபன் செய்து, அதில் Ease of Access Center என்ற செயலியை கிளிக் செய்யவும்.

பின்னர் அதில் Make the mouse easier to use என்ற ஆப்ஷனை கிளிக் செய்க.

Turn on Mouse Keys என்பதை டிக் செய்து ஒகே கொடுத்தால் அவ்வளவு தான்.உங்கள் Keyboard ஆனது Mouse போல செயல்பட தயாராகி விட்டது.மேலும், இதனை left Alt+ left Shift+ Num Lock போன்றவற்றை ஒரு சேர அழுத்தியும் ஆக்டிவேட் செய்யலாம்.

Numeric Keypad மூலம் நீங்கள் Mouse ஆப்ஷனை பயன்படுத்தலாம். 6 பட்டன் மூலம் நீங்கள் Cursor-ஐ வலது பக்கம் நகர்த்தலாம். 4 பட்டனை பயன்படுத்தி இடது பக்கமாகவும், 8-ஐ பயன்படுத்தி மேல் பக்கமாகவும், 2-ஐ கீழ் பக்கமாகவும் நகர்த்தலாம். 5 மற்றும் + பட்டன்களை வலது கிளிக்காவும், 0 இடது கிளிக்காகவும் பயன்படுகிறது.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top