ராஜதந்திரம் - தன் தந்திரத்தால் கவர்ந்து விட்டார்.-திரை விமர்சனம்..!,

தமிழ் சினிமாவில் பரபர என காட்சிகள் இருக்க வேண்டுமெனில் ஒன்று ஹரி படமாக இருக்க வேண்டும், அல்லது வங்கி கொள்ளை, நகை கடை கொள்ளை என திரைக்கதை இருக்க வேண்டும். அப்படி ஒரு திரைக்கதை கொண்ட படம் தான் இந்த ராஜதந்திரம்.

நடுநிசி நாய்கள் படத்தின் ஹீரோ வீரா மீண்டும் இப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் மற்றும் நடிகர் இருவருமே கௌதம் மேனன் பட்டறை தான்.

கதை

படத்தின் ஆரம்பத்திலேயே 90களில் பைனான்ஸ் கம்பெனி மோசடியில் கைதாகிறார் நரேன், இவரால் பாதிப்படைந்த குடும்பம் ஒன்றில் மனைவி, மகளை தனியாக விட்டு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதை தொடர்ந்து கதை இந்த கால கட்டத்திற்கு வருகிறது.

ஹீரோ வீரா மற்றும் இரண்டு நண்பர்கள் சின்ன சின்ன திருட்டு வேலை செய்து மோசடி செய்து வருகின்றனர். அப்போது ஹீரோயின் ரெஜினா நட்பு யதார்த்தமாக இவர்களுக்கு கிடைக்க வழக்கம் போல் அவர் ஹீரோவை மட்டும் காதலிக்கிறார்.

செய்தால் சின்ன திருட்டு தான், பெரிய அளவில் ஏதும் செய்ய கூடாது என்று நினைத்திருக்கும், இவர்களை நரேன், தன் சொந்த லாபத்திற்காக ஒரு பிரச்சனையில் மாட்டி விட்டு அதன் மூலம் செக் வைத்து தன் வேலையை செய்யுமாறு கட்டளையிடுகிறார். ஆனால், இதற்கு ஹீரோ ஒத்தழைக்காமல், நரேன் எந்த நகை கடையை கொள்ளையடிக்க சொன்னாரோ, அந்த கடை உரிமையாளரிடமே போய் சொல்ல, அவர்கள் நரேனை காரில் இடித்து கொள்ள முயற்சி செய்கின்றனர்.

பின் தான் தெரிகிறது, நரேன் மிகவும் நல்லவர், அந்த நகை கடை உரிமையாளார் தான் ஆசை வார்த்தை காட்டி இவரை ஏமாற்றியுள்ளார் என்று. பின் தந்த தந்திர மூளையை பயன்படுத்தி எப்படி அந்த நகை கடையை வீரா கொள்ளையடிக்கிறார் என்பது தான் விறுவிறு சஸ்பென்ஸ் நிறைந்த மீதிக்கதை.

நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு

ஹீரோ வீரா சதுரங்க வேட்டை நட்டியை நியாபகப்படுத்துகிறார். இவருடைய நண்பராக வரும் இளைஞர் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் லிஸ்டிற்கு வெல்கம். சிறிய வசனங்களால் சிரிப்பு மூட்டுகிறார். பைனான்ஸ் கம்பெனி ஏமாற்றியதால் இறந்து போகும் நபருடைய மகள், அவருக்காக தான் சில பெரிய வேலையை ஹீரோ செய்ய சம்மதிக்கிறார்.

இதற்காக மட்டும் தான் இவர் பயன்படுகிறார். மற்றப்படி நடிப்பதற்கு ஸ்கோப் இல்லை. நரேன், இளவரசு என எல்லோரும் யதார்த்தமாக நடித்திருந்தாலும், வில்லனாக வரும் நகை கடை உரிமையாளர் தான் ஒருபடி மேல் சென்று நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ் என்று டைட்டில் கார்டில் போடும் போது தான் தெரிகிறது. என்ன பாஸ் ஆச்சு உங்களுக்கு.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை, இந்த மாதிரி கதையம்சம் படங்களுக்கு கண்டிப்பாக இரண்டாம் பாதி விறுவிறுவென செல்ல வேண்டும் என்பது விதி, அதை நன்றாக செய்துள்ளார், அறிமுக இயக்குனர் அமித். மேலும், நரம்பை முறுக்கி கொண்டு கத்தாமல் மென்மையாக மிரட்டும் வில்லன் நன்றாக நடித்திருக்கிறார்.

படத்தின் வசனங்கள், பல இடங்களில் பிலாஷஃபியாக வருவது ரசிக்க வைக்கிறது.

பல்ப்ஸ்

வீரா-ரெஜினா காதல் காட்சிகள், மிகவும் செயற்கையாக உள்ளது, முதல் பாதி இதனால் கொஞ்சம் தடுமாறுகிறது. ஜி.வி இன்னும் பின்னணி இசையை கவணித்திருக்கலாம்.

பல படங்களில் பார்த்த டுவிஸ்டுகள் கிளைமேக்ஸ் நகை கடையை திருடும் காட்சிகளில், சில நேரங்களில் ஆங்கில படங்களையும் நியாபகப்படுத்துகிறது.

மொத்தத்தில் முதல் பாதியில் ராஜா பின் வாங்கினாலும், இரண்டாம் பாதியில் தன் தந்திரத்தால் கவர்ந்து விட்டார்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top