வானவில் வாழ்க்கையில் - எந்த வண்ணமும் கண்களுக்கு தெரியவில்லை

தமிழில் படங்களில் என்றும் இசைக்கு என்று தனி மரியாதை உண்டு. அந்த வகையில் முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்கள் கொஞ்சம் குறைவு தான்.

ஜேம்ஸ் வசந்தன் அடிப்படையில் ஒரு இசையமைப்பாளர் என்பதால், இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கும் படம் தான் வானவில் வாழ்க்கை.

கதை

படத்தின் கதாநாயகன் ஜிதின் வெளிமாநிலத்திலிருந்து, சென்னைக்கு படிக்க வருகிறார். கல்லூரியில் நடக்கும் அனைத்து இசை போட்டிகளிலும் வெல்ல, கல்லூரியில் ஹீரோவாகிறார் இவர். இங்கு பவித்ரன் என்பவருடன் ஜிதினுக்கு நட்பு ஏற்படுகிறது.

இதை தொடர்ந்து பல கல்லூரிகளில் இசைப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார் ஜிதின். இதன் அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் இசைப்போட்டியில் ஜிதின் குழு கலந்து கொள்ள, அதே போட்டியில் நாயகிகளான ஜனனி ராஜன், ஷல்வி ஷாரோன், மாயா, ராதிகா ஜார்ஜ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு இசைக்குழுவும், மற்றொரு கல்லூரியில் இருந்து கெஸான்டராவும் கலந்து கொள்கிறார்கள்.

இதில் ஜிதினின் இசைக்குழு முதல் இடத்தையும், ஜனனி ராஜனின் இசைக்குழு இரண்டாவது இடத்தையும், கெஸான்டரா மூன்றாவது பரிசையும் வெல்ல, இந்த மூன்று வெற்றியாளர்களும் மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கிடையே இவர்களின் ஈகோ, சண்டை, ஏமாற்றம் இதெல்லாம் கடந்து அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றார்களா? என்பதே மீதிக்கதை.

நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு

படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் தான், முடிந்த அளவிற்கு நன்றாக நடிக்க முயற்சி செய்துள்ளார்கள். படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் வசந்தனே இசையமைப்பாளர் என்பதால் பாடல்கள் கதைக்கு ஏற்ப கொடுத்துள்ளார்.

படத்தில் 15 பாடல்கள் இருந்தாலும் எந்த பாடலுமே மனதில் நிற்கவில்லை.

க்ளாப்ஸ்

தமிழ் சினிமாவில் மியுஸிக்கல் வகை படத்தை பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது, இதற்காகவே இப்படத்தை வரவேற்கலாம்.

பல்ப்ஸ்

படத்தில் இடம்பெறும் பாடல்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் உச்சக்கட்ட பொறுமையை சோதிக்கிறது. ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜேம்ஸ் வசந்தன், இயக்குனராக தடுமாறியுள்ளார்.

மொத்தத்தில் வானவில் வாழ்க்கையில் எந்த வண்ணமும் கண்களுக்கு தெரியவில்லை.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top