உண்மையை எழுதினால் சாபம் விடுகிறார் சிம்பு

சிம்புவை வைத்து நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்த படம் வாலு.

ஹன்சிகா கதாநாயகியாக நடித்தார்.

‘வாலு’ படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

வாலு படத்தைத் தொடங்கியபோது எப்படியாவது ஹன்சிகாவை தன் வழிக்குக் கொண்டுவர நினைத்த சிம்பு, ஹன்சிகாவை இம்ப்ரஸ் பண்ணுவதிலேயே கவனம் செலுத்தினார்.

அதனால் படப்பிடிப்பு ஒழுங்காக நடக்கவில்லை. தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

சில மாதங்களில் ஹன்சிகா சிம்புவிடம் க்ளீன்போல்ட் ஆனார்.

விக்கெட் விழுந்ததும் சிம்பு ஹன்சிகா இருவரும் படப்பிடிப்பை மறந்து கேரவானிலேயே குடித்தனம் நடத்தினார்கள்.

மொத்தப் படப்பிடிப்புக்குழுவினரும் கேரவான் அருகிலேயே தேவுடு காக்க, சிம்புவோ ஹன்சிகா உடன் கேரவானில் கெமிஸ்ட்ரி பாடம் படித்துக் கொண்டிருந்தார்.

இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறாமல் தயாரிப்பாளர் தலையில் துண்டைப்போட்டுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவின் காமம்… ஸாரி.. காதல் முடிவுக்கு வந்தது.

காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு ஹன்சிகா இருவருக்கும் இடையில் நடந்த முட்டல் மோதலில் தயாரிப்பாளருக்கு ரத்தம் வந்துவிட்டது.

மொத்தத்தில் சிம்புவின் பொறுப்பற்றத்தனத்தினால் வாலு படத்தின் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம்.

சிம்பு படம் பெரும்பாலும் தியேட்டரில் ஓடுவதில்லை, தியேட்டரைவிட்டுத்தான் ஓடும்.

ஏதாவது அதிசயம் நடந்து வாலு படம் ஒரு வாரம் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடினாலும் கூட தயாரிப்பாளர் தலையில் துண்டுதான்.

வாலு படத்துக்காக தயாரிப்பாளர் வாங்கிய கடன் தொகை ப்ளஸ் வட்டி எல்லாம் சேர்த்து 35 கோடி.

இதனால் வாலு படத்தின் ரிலீஸ் தேதி கன்னித்தீவு கதையைப்போல் நீண்டுக்கொண்டே போகிறது.

வாலு படத்தின் ரிலீஸ் தேதி என்று முதலில் சொல்லப்பட்டது 2013 தீபாவளிக்கு.

பிறகு 2014 பொங்கல் என்றார்கள்.

அப்புறம் 2014 டிசம்பரில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

பின்னர் 2015 பொங்கலுக்கு என்றார்கள்.

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸாகவிருந்ததை காரணம்காட்டி ‘வாலு’வின் ரிலீஸ் தேதியை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதிக்கு மாற்றினார்கள்.

அந்த தேதியும் மாற்றப்பட்டு, மார்ச் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் சென்சாருக்கு அனுப்பட்டு ‘வாலு’வுக்கு ‘யு’ சான்றிதழும் கிடைத்தது.

இந்நிலையில் மார்ச் 27ல் உறுதியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட ‘வாலு’ படம் அந்த தேதியிலும் வெளிவராது என்பதே லேட்டஸ்ட் நிலவரம்.

தற்போது மே 1 அன்று ரிலீஸ் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்கிறது.

35 கோடி பஞ்சாயத்து முடிந்தால்தான் மே 1 அன்று வாலு ரிலீஸ் ஆகும் என்பதே இறுதி நிலவரம்.

வாலு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதை செய்தியாக்கினால்…

”எனக்கெதிராக சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகின்றனர். இவர்களை நான் மன்னித்தாலும் கர்மா மன்னிக்காது’’ என சாபம் விடுகிறார் சிம்பு. 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top